தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக
![]() |
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் |
காளையாக நிமிர - பொலிக்
காளையாக நிமிர
காடு கரை வீடு எல்லாம்
கதிரவனால் ஒளிர
கரையுடைத்து ஓடும் வெள்ளம்
அணைகளிலே மூழ்க - பெரு
அணைகளிலே மூழ்க
கவலைகளை மறந்து மக்கள்
களிப்பினிலே மூழ்க
வரப்புயர நெல்லுயரும்
வட்டிக் கடன் குறையும்
வட்டிக் கடன் குறையும்
வாழ வந்த பெண்களுக்கு
தங்கம் கழுத்தில் நிறையும்
கரும்பின் அடி இனிப்பு போல
காதல் வாழ்வில் மகிழ -மக்கள்
காதல் வாழ்வில் மகிழ
பசி பிணி பட்டினிகள்
சாதல் கண்டு மகிழ
பொங்க வேண்டும் இன்பமெலாம்
பசுவைக் கண்ட கன்றாய் - தாய்ப்
பசுவைக் கண்ட கன்றாய்
மங்க வேண்டும் துன்பமெல்லாம்
மாரி கண்ட கன்றாய்
தைமகளே வருக
தரணி பொங்கத் தருக-இன்பம்
தரணி பொங்கத் தருக
செந்நெல்லின் தோகைகள் போல்
செழுமை வாழ்வில் பெருக
----
மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை அன்பு வணக்கம் கூறி, விடை பெற்றுக் கொள்வது;
மன்னார் அமுதன்
நன்றி,
வணக்கம்.
அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
|
9 comments:
காலை வணக்கம்!அருமையான தைக்கவிதை!தமிழர் திருநாளாம் தைத் திருநாளில் உங்களுக்கும்,உங்கள் சேர்ந்த அனைவருக்கும்,மற்றும் தாயக் உறவுகள் அனைவருக்கும் பிறக்கும் புத்தாண்டில் நல்லது நிகழ எல்லாம் வல்லவனை வேண்டுகிறேன்!
நன்றி தோழரே
அன்பின் காட்டான் சகோதரரே,
அழகிய பாடல் வரிகள்...
செந்நெல்லின் தோகைப்போல எல்லோரின் வாழ்க்கையிலும் செழுமை பொங்க வேண்டிடும் உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும்....
பெண்களின் உடலில் தங்கம் நிறையட்டும் மனதில் அன்பு பெருகட்டும்...
விவசாயிகளின் வட்டிக்கடனெல்லாம் குறைந்து அவர்கள் வாழ்விலும் நலன்கள் பெருகட்டும்....
கவலைகள் எல்லாம் தீர்ந்து எல்லோருமே சுகமாய் இருக்கட்டும்...
சிந்தனை செறிவு மிகுந்த வரிகள் அமைப்பு சகோதரரே...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு பொங்கல் வாழ்த்துகள்பா...
அழகான பொங்கல் பாடலொன்று !
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
// மஞ்சுபாஷிணி said...
அன்பின் காட்டான் சகோதரரே,
அழகிய பாடல் வரிகள்...//
யாரது காட்டான் சகோதரர்....
@மஞ்சுபாஷிணி
அன்பின் காட்டான் சகோதரரே,
//
இப் பதிவினை எழுதியவர் யார் என்று பதிவின் கீழே எழுதியிருக்கிறோம். இப் பதிவினை எழுதியவர் மன்னார் அமுதன் அவர்கள்.
அப்படீன்னா காட்டான் சகோதரர் என்பதற்கான அர்த்தம்?
சகோதரி எனது பதிவு என்று தவறாக விளங்கிக்கொண்டார்.. நான்தான் அவருக்கு லிங்க் கொடுத்தது. அவரிடம் சொல்கிறேன்..!!
மன்னார் அமுதன் said... Best Blogger Tips [Reply To This Comment]
// மஞ்சுபாஷிணி said...
அன்பின் காட்டான் சகோதரரே,
அழகிய பாடல் வரிகள்...//
யாரது காட்டான் சகோதரர்....
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
தம்பி யார் காட்டான் என்று கேட்பதற்கு முன்னர் ஈழவயலில் பதிவேற்றுவோர் பெயர்களையும் ஒருதரம் பார்க்கலாமே..?
Post a Comment