எல்லோருக்கும் வணக்கம், எல்லோரும் எப்படிச் சுவமாய் இருக்கிறீங்களே? சுகமில்லை என்று மட்டும் சொல்லிப் போடாதேங்கோ என்ன? சுவமில்லை, சுகமில்லை என்றால் அர்த்தம் ரெண்டு விதத்தில வந்திடும் பாருங்கோ. ஒன்று சுகவீனமாய் இருக்கிறதையும், உடல் நலக் குறைவால் அவதிப்படுவதையும் சுகமில்லை என்று என்ர குஞ்சியப்பு காலத்தில இருந்து ஈழத்தில சொல்லுவீனம் கண்டியளே. சுகமில்லை அல்லது சுவமில்லை என்றால் அர்த்தம் இன்னோர் மாதிரியும் வந்து கொள்ளும். ஊரில குழூக் குறியாக பொம்பிளையளின் மாதவிடாய் காலத்தையும் சுகமில்லை என்று தான் சொல்லுவீனம் பாருங்கோ.
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், வாங்கோ பதிவுக்குள் போய் பந்திக்குள் உட்காருவோம்.
சாகப் போற வயசிலையும் இந்த விண்ணாணம் விநாசியப்புவிற்கு வலைப் பதிவு கேக்குதோ என நீங்கள் எல்லோரும் முணு முணுப்பது கேட்குது பாருங்கோ. என்ன செய்ய. கூகிள் அக்கா ஓசியில குடுக்கிறா. நான் ஏசியிற்குள் இருந்து ஓசியில எழுதுறேன் பாருங்கோ. இப்பத் தான் ஞாபகம் வருது பாருங்கோ. "ஓசியில ஏசி என்றால் எங்கட சனம் ஊசி போடக் கூட பின் நிற்காது” என்று ஒரு வசனம் சொல்லுவீனம் பாருங்கோ. அது போலத் தான் நானும் பாருங்கோ ஏதாச்சும் எழுதுவம் என்று ஓசியில வெளிக்கிட்டு இப்ப என்ன எழுதுவது என்று திக்கு முக்காடிப் போய் நிற்கிறேன் பார்த்தியளே!
விண்ணாணம் விநாசியப்புவின் வில்லங்கப் பகுதி என்று ஈழவயலில் ஒரு பகுதியை அறிமுகப்படுத்தி ஏதாச்சும் எழுதலாம் என்று ஆசை தான் பாருங்கோ. ஆனா அதுக்கு நிர்வாகியள் ஒத்துக் கொள்ளனுமே. விண்ணாணம் விநாசியப்புவும் ஈழத் தமிழும் அப்படீன்னு ஒரு பகுதியை உரையாடல் வடிவில எழுதலாம் என்றும் ஆசை தான் பாருங்கோ. ஆனால் என் மண்டைக்குள்ள களிமண் இருக்கிற நேரத்தில எப்படியுங்கோ எழுத வரும்? உண்ணாணை கோவிச்சுக் கொள்ளாதீங்கோ.ஏதோ சில சொற்களை சேர்த்து நானும் சும்மா கிறுக்கியிருக்கிறேன். படிச்சதும், என் மேல கோபத்தில பாஞ்சிடாதேங்கோ.
பல இளம் புள்ளையள் இங்கே இணையத்தில குழுமியிருந்து கும்மியடிக்கிற நேரத்தில கிழவன் எனக்கு பெஞ்சன் எடுத்த வயசில எழுத என்ன விஷயம் இருக்கப் போகுது பாருங்கோ? நானும் பனை வடலிக்கு கீழயும், குஞ்சியப்புவின்ர தென்னப் புள்ளைக்கு கீழயும் உசாரா இருந்து யோசித்துப் பார்த்தாலும் எதுவும் எழுத வரமாட்டுதுங்க. சந்தர்ப்பம் கிடைச்சா அடுத்த பதிவினூடாக உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன். அது வரைக்கும், தற்காலிகமாக அன்பு வணக்கம் கூறி விடை பெற்றுக் கொள்வது,
விண்ணாணம் விநாசியார்.
அரும்பத விளக்கம் / சொல் விளக்கம்:
*கண்டியளே: கேட்டீர்களா? /பார்த்தீர்களா?
*இன்னோர் மாதிரி: வேறோர் வகையில், மற்றுமோர் வகையில்
*பாருங்கோ: பாருங்கள்/ இங்கே பார்க்கவும்.
*அதெல்லாம்: அவை எல்லாம்
*கேக்குதோ: கேட்கிறதா
*முணு முணுப்பது: வாயிற்குள் மௌனமாய் பேசுதல், மனசிற்குள் ஒருவரைக் கடிந்து கொள்ளல்
*ஏதாச்சும்: ஏதாவது
*நிற்காது: நிறுத்தமின்றி, நிறுத்த முடியாது.
*உண்ணாணை: உன்னானை - உன் மீது / உன் மேல் ஆணையாக
*பாஞ்சிடாதீங்கோ: பாய்ந்து விடாதீர்கள்.
*பெஞ்சன்: Pension , ஓய்வூதியம்.
*புள்ளை: பிள்ளை.
*கிடைச்சா: கிடைத்தால்.
|
2 comments:
விண்ணாணம் விநாசியப்பு, எங்களுக்கு எல்லாம் நல்ல்லா
விளங்கிப்போட்டுது, பனை வடலிக்கு கீழேயும் தென்னம் புள்ளைக்கு கீழேயும், பாலைக் குடிச்சுக்கொண்டு தானே, ஆறுதலாய் யோசிக்கப் போறியள் எண்டு, ஆக அடுத்த பதிவு எல்லாரையும் மிதக்க வைக்கபோகுது தானே........
உது நல்ல விண்ணாணமாவெல்லோ கிடக்கு???ஹி!ஹி!ஹி!!!
Post a Comment