ஈழவயலோடு இணைந்து கொள்ள

ஈழவயலோடு உங்களையும் இணைத்துக் கொள்ள வந்திருக்கும் உறவுகளே,
வணக்கம்,

காலத்தின் தேவையறிந்து, ஞாலத்தில் எம் ஈழத் தமிழ் மொழியின் நிலையுணர்ந்து தமிழ் மீதான எம் பிணைப்பினை வேகப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டிருக்கும் ஈழவயல் வலைப் பதிவு உங்களுக்கானது. ஈழத்தின் மொழி, கலை, கலாச்சார பண்பாட்டியல், பிரதேசச் சிறப்புக்களோடு, மொழி ஆய்வு பற்றிய விடயங்களையும், சமூக சிந்தனையுடன் கூடிய விடயங்களையும் உங்கள் ஈழவயலில் நீங்கள் பகிர்ந்து உவகையடைய முடியும். ஈழவயலில் உறுப்பினர்கள் அல்லாதவராக நீங்கள் இருந்தாலும் உங்களின் படைப்புக்களை உங்களின் விபரங்களோடு உங்களின் பதிப்புரிமையுடன் கூடியவாறு பிரசுரித்து வலையேற்றும் பரி பூரண உரிமையினை ஈழவயல் குழுமத்தினராகிய நாம் உங்களுக்கு வழங்க காத்திருக்கின்றோம். நீங்கள் தயாரா?

உறுப்பினர் அல்லாதோர் ஈழவயலில் தம் பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது அவர்களின் தொடர்ச்சியான பங்களிப்பினைக் கருத்திற் கொண்டு காலப் போக்கில் ஈழவயலில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்போது ஈழவயலோடு உங்களை நீங்கள் இணைத்துக் கொள்ளத் தயாரா? அதற்கு முன்பதாக.....

ஈழவயலில் உங்கள் பதிவுகளையும் பகிர்வதற்கான நிபந்தனைகள்:
  • ஈழவயலில் பதிவுகளை இணைத்துக் கொள்ளும் சொந்தங்களின் படைப்புக்கள் யாவும் சுய படைப்புக்களாக இருக்க வேண்டும். ஒத்தி ஒட்டும் படைப்புக்களினை (Copy And Paste) இணைத்துக் கொள்ளவது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  • ஈழத்து அரசியல் நிலவரங்களுக்கு அமைவாக அரசியல் சாடல்கள் அல்லது அரசியல் சார்ந்த பதிவுகளை நீங்கள் இங்கே பகிர்வதனை தவிர்ப்பது கட்டாயமான விடயமாகும்.
  • ஈழவயலில் வெளியாகும் படைப்புக்கள் ஒவ்வொன்றிற்கும் அப் படைப்பின் சொந்தக்காரரே பூரண உரித்துடையவராவார். படைப்புக்கள் யாவும் உறுப்பினர்களால் பரிசீலனை செய்து பிரசுரிக்கப்பட்டாலும், விவாதங்கள், சர்ச்சைகள் வருகின்ற போது உங்கள் படைப்புக்களினைப் பற்றிய நிலையினை உணர்ந்து ஈழவயல் குழுமமும் உங்களோடு பின் நிற்கும். அதே வேளை நீங்களும் ஈழவயல் குழுமத்தினர் உங்கள் படைப்புக்களின் ஸ்திரத் தன்மை தொடர்பாக சர்ச்சைகளை எதிர் கொள்ளும் போது கரங் கொடுத்து நிற்க வேண்டும்.
  • ஈழவயலில் தனி மனித தாக்குதல்கள், ஆபாசம் நிறைந்த பதிவுகளை நீங்கள் தவிர்ப்பது சாலச் சிறந்தது. சில விடயங்களை விளக்க வேண்டிய தேவை ஏற்படும் பட்சத்தில் மென்மையாகவும், விரசமற்றும் உங்கள் கருத்துக்களை நீங்கள் பகிரலாம்.   
மேற்படி நிபந்தனைகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கிறதா? அப்படியாயின் நீங்கள் செய்ய வேண்டியது இது தான்: info@eelvayal.com எனும் மின்னஞ்சலுக்கு உங்கள் படைப்புக்களை அனுப்பி வையுங்கள். இல்லையேல் கீழே உள்ள தொடர்பு பெட்டியூடாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

foxyform.com
இணையத்தில் ஈழத்து மண் வாசத்தை சுமந்து வரும் ஈழ வயல்! 
உங்கள் இதயதங்களைக் கொள்ளையிடப் போகும் தமிழ் இயல்! 
தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்
ஈழவயல் குழுவினர்!
நன்றி;
வணக்கம்!!

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!