Wednesday, 11 April 2012

நான் வளர்த்த பச்சைகிளி

இணையத்தினூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.

தாயகத்திலும் இங்கு என்ரை வீட்டிலும் கிளிப்பிள்ளை பெத்தம்மா பச்சைக்கிளி என்று பல பெயர்களும் சொல்லி ஆசையாக கிளி வளர்த்தனான். அவற்றின் அழகில் மயங்கியிருந்த ஞாபகம் வந்தது. அதுதான் இந்தப்பதிவு.


கிளி அழகானது. கிளி பேசுவது இனிமை. இப்பொழுதும் நான் என்ரை வீட்டில் என்ரை வீட்டில் செல்லம்மா, மகள், மருமகள் என்று மூன்று அழகான பேசும் கிளிகளை ஆசை ஆசையாக வளர்க்கிறன் ஆனால் இப்ப நான் சொல்லவாறது இந்த கிளிகளைபற்றி இல்லை. எங்கட தாயகத்தில் வாழும் பச்சைக்கிளிகளைப்பற்றி.


பாவம் இந்த கிளிகள் இவற்றின் அழகும், இனிமையாக பேசும் திறமையுமே இவற்றிற்கு எதிரியாகிபோனது. தாயகத்தில் பலவீடுகளிலும் செல்லப்பிராணியாக கூண்டில் அடைக்கப்பட்டு விட்டன.கூறிய ஒரு விடயத்தையே திரும்பத்திரும்ப அதேபோல சொல்லிக்கொண்டு இருப்பவர்களை கிளிப்பிள்ளைபோல பேசுகிறான் என்றும், நீண்டு வளைந்த மூக்கு உடையவர்களை கிளிமூக்கன் என்றும் கூறுவது எங்கள் கிராமங்களில் வழமை.ஈழத்தில் சாதாரண பச்சைக்கிளி, கழுத்தில் மாலை கட்டியதுபோல சிவப்புநிறத்தில் ஒரு வட்டக்கோட்டுடன் காணப்படும் கிளி என இரண்டு வகை கிளிகள் மட்டுமே காணப்பட்டாலும் அமேசன் காடுகள் தென்னாபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா என உலகின் பல பாகங்களிலும்மாக 75 இற்கு மேற்பட்ட கிளி இனத்தை சேர்ந்த பறவைகள் வாழ்கின்றன.கிளிகள் மாம்பழம் நெற்கதிர், மிளகாய்ப்பழம், பயற்றங்காய் போன்றவற்றை விரும்பி உண்ணும்.ஊரிலுள்ள தோட்டங்களில் மிளகாய் செடி பயிரிடப்படும் காலங்களில்லும் மாம்பழம் காய்த்து பழுக்கும் காலங்களிலும் சிறு சிறு கூட்டம் கூட்டமாக வந்து மிளகாய் பழங்களையும் மாம்பழங்களையும் ஒரு வழிபண்ணிவிடும். இதனால் தோட்டக்காரர்களுக்கு இவற்றை பிடிக்காது.இவை பெரும்பாலும் தென்னை, பனை போன்ற மரங்களில் காணப்படும் பொந்துகளில் வாழும்.
கிராமங்களில் தாய்மார்கள்
பச்சை கிளியே வா வா வா
பாலும் சூறும் உண்ண வா
என்று பாடிக்கொண்டு தமது குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது வழமை.
எமது நாட்டு கிளிகள் இலங்கை முத்திரையிலும் இடம் பிடித்துக் கொண்டுவிட்டன.

இது ஜேர்மனியில் நாங்கள் கொஞ்சக்காலத்துக்குமுன் கொஞ்சிக் கொஞ்சி பாசமாக வளர்த்த கிளி. எனது தோளில் உட்கார்ந்து இருக்கும்போது எடுத்த படம். சென்ற வருடம் எமது வீட்டிற்கு புதிதாக வர்ணம் பூசும்போது வர்ணக்கலவையிலுள்ள இரசாயன பொருட்களின் மணத்தை சுவாசித்ததில் இந்த கிளி அநியாயமாக இறந்துவிட்டது இன்றும் மறக்கமுடியாத எங்கவீட்டின் சோகங்களில் ஒன்று.


இளையராஜாவை உச்சங்களிற்கு அழைத்து செல்ல அத்திவாரமிட்ட இந்த அன்னக்கிளி உன்னை தேடுதேயையும் மீண்டும் ஒரு தடவை கேட்டு ரசிப்போமே
மீண்டும் மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கும்வரை நேசமுடன் விடை பெறுவது,
அம்பலத்தார்

26 comments:

மகேந்திரன் said... Best Blogger Tips

வணக்கம் ஐயா...
ஒயிலுக்கும் வண்ணத்திற்கும்..
பேசும் மொழியிலும்...
மற்ற பறவைகளிடமிருந்து
மாறுபட்ட அழகுப் பறவை கிளி
பற்றிய அழகிய பதிவு ஐயா....

அன்னக்கிளி பாடல் நெஞ்சில் இனிக்குது ஐயா.
பகிர்வுக்கு நன்றிகள்.

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் அம்பலத்தார்.
கழுத்தில் சிவப்பு மாலை போல இருக்கும் கிளி ஆண் கிளி.. அந்த சிவப்பை "ஆரம்" என்று சொல்லுவாங்க..!! 

ஹேமா said... Best Blogger Tips

அம்பலம் ஐயா கிளிப்பேச்சுக் கேட்கவா எண்டு கூப்பிடுறீங்கள் போல.ஜேர்மன்லயும் கிளி வளர்த்தீங்களோ.அதிசயமா இருக்கு.அந்தக் கிளிக்கு ஆரம் இல்லாமல் தலையில் சிவப்பு இருக்கு.அழகான கிளி.

உண்மைதான் சிலசமயங்களில் மனிதர்களிடம் வைக்கும் அன்பைவிட மிருகங்கள்.பறவைகளிடம் வைக்கும் அன்பு கஸ்டப்படுத்தும் !

ஆகுலன் said... Best Blogger Tips

எனக்கும் கிளி வளர்க ஆசைதான் ஆனா...சந்தர்பம் கிடைக்கவில்லை.
அனால் தெரிந்தவர்களின் கிளிகளோடு பழகி இருக்குறேன்.........

Yoga.S.FR said... Best Blogger Tips

வணக்கம் அம்பலத்தார்!கிளி!!!!!!நல்ல வேளை,பறவையைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்!மனிதர்களுக்கும்(பெண்/ஆண்)வித்தியாசமில்லாமல் பெயர் வைத்திருத்தார்கள்.எங்கள் பக்கத்து வீடுகளில் இரண்டு பெண் கிளிகள் இருந்தார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!

Yoga.S.FR said... Best Blogger Tips

முகத்தைக் காட்டினால்(போட்டோவில்)கிளி கொத்திக் கொண்டு போய் விடுமோ?ஹி!ஹி!ஹி!!!!!

Yoga.S.FR said... Best Blogger Tips

ஆகுலன் said...

எனக்கும் கிளி வளர்க்க ஆசைதான் ஆனா...சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அனால் தெரிந்தவர்களின் கிளிகளோடு பழகி இருக்குறேன்.........///அந்தக் "கிளி" பறவை தானே???Ha!Ha!!!Haa!!!!!!!

அம்பலத்தார் said... Best Blogger Tips

மகேந்திரன் said...

வணக்கம் ஐயா...
ஒயிலுக்கும் வண்ணத்திற்கும்..
பேசும் மொழியிலும்......//

வணக்கம் மகேந்திரன் உங்கள் இனிய பின்னூட்டத்திற்கும் வரவிற்கு நன்றி

அம்பலத்தார் said... Best Blogger Tips

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்.
கழுத்தில் சிவப்பு மாலை போல இருக்கும் கிளி ஆண் கிளி.. அந்த சிவப்பை "ஆரம்" என்று சொல்லுவாங்க..!!//
வணக்கம் காட்டான், தகவலிற்கு நன்றி. எனக்கு ஒரு சந்தேகம். நீங்க என்ன விக்கிபீடியாவை முழுதாக விழுங்கிப்போட்டியளோ. எந்த ஒரு விடயம் எனினும் சட்டென தகவல்களுடன் வருகிறீர்கள்.

அம்பலத்தார் said... Best Blogger Tips

ஹேமா said...

உண்மைதான் சிலசமயங்களில் மனிதர்களிடம் வைக்கும் அன்பைவிட மிருகங்கள்.பறவைகளிடம் வைக்கும் அன்பு கஸ்டப்படுத்தும் !//
உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி கவிதாயினி ஹேமா.
நீங்கள் கூறுவது உண்மைதான் ஹேமா. அதுமட்டுமில்லை பல சந்தர்ப்பங்களிலும் மனிதர்களைவிட மிருகங்கள் எமக்கு அன்புகாட்டுவது அதிகம்.

அம்பலத்தார் said... Best Blogger Tips

ஆகுலன் said...

எனக்கும் கிளி வளர்க ஆசைதான் ஆனா...சந்தர்பம் கிடைக்கவில்லை.
அனால் தெரிந்தவர்களின் கிளிகளோடு பழகி இருக்குறேன்.........//
ஆகுலன் வளர்த்துப்பார்த்தீர்கள் என்றால் அவறைப்பற்றி நன்கு புரிந்துகொள்ளமுடியும். எங்கள் வீட்டில் கூட்டை மூடுவதில்லை. நாங்கள் வளர்த்த கிளை வீட்டிற்குள் எல்லா இடமும் பறந்து திரியும், தானே கூட்டிற்குள் செல்லும். நாங்கள் உணவு உண்ண மேசையில் உட்கார்ந்தால் தானும் பங்கு கேட்டு மேசைக்கு வந்துவிடும். நான் கொம்பியூட்டரில் உட்கார்ந்திருக்கும்போது எனது தோளில் வந்து உட்கார்ந்து இருக்கும்.... அதன் செயல்களை மறக்கமுடியாது.

அம்பலத்தார் said... Best Blogger Tips

Yoga.S.FR said...

வணக்கம் அம்பலத்தார்!கிளி!!!!!!நல்ல வேளை,பறவையைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்!மனிதர்களுக்கும்(பெண்/ஆண்)வித்தியாசமில்லாமல் பெயர் வைத்திருத்தார்கள்.எங்கள் பக்கத்து வீடுகளில் இரண்டு பெண் கிளிகள் இருந்தார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!//
ஹா ஹா!... யோகா, அப்ப உங்களுக்கும் கிளி பிடித்த அனுபவம் இருக்கு என்றது புரியுது.

Yoga.S.FR said... Best Blogger Tips

Yoga.S.FR said...

முகத்தைக் காட்டினால்(போட்டோவில்)கிளி கொத்திக் கொண்டு போய் விடுமோ?ஹி!ஹி!ஹி!!!!!/////டேய்!வயசுக்கேற்ற கதை இருக்க வேணும்,சொல்லிப்போட்டன்!பிச்சுப்புடுவன்,பிச்சு!

Yoga.S.FR said... Best Blogger Tips

ஆகுலன் said...

எனக்கும் கிளி வளர்க ஆசைதான் ஆனா...சந்தர்பம் கிடைக்கவில்லை.
அனால் தெரிந்தவர்களின் கிளிகளோடு பழகி இருக்குறேன்.........//நண்பர்கள் "ராஜ்"அண்ணன் தேடினவர்.

வீடு சுரேஸ்குமார் said... Best Blogger Tips

கிளி வளர்க்கலாம் ஆனா வீட்டுல இறக்ககூடாதுன்னு சொல்லுவாங்க....!
ஒரு உறவை இழந்த மாதிரி கிளியின் இழப்பு!

T.N.MURALIDHARAN said... Best Blogger Tips

கிளிகள் பற்றிய பதிவு அருமை.

Yoga.S.FR said... Best Blogger Tips

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...

வணக்கம் அம்பலத்தார்!கிளி!!!!!!நல்ல வேளை,பறவையைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்!மனிதர்களுக்கும்(பெண்/ஆண்)வித்தியாசமில்லாமல் பெயர் வைத்திருத்தார்கள்.எங்கள் பக்கத்து வீடுகளில் இரண்டு பெண் கிளிகள் இருந்தார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!//
ஹா ஹா!... யோகா, அப்ப உங்களுக்கும் கிளி பிடித்த அனுபவம் இருக்கு என்றது புரியுது.///ஊஹும்..... அம்பலத்தார்!என்னைத்தான் "கிளி"யள் புடிச்சிருக்கு!ஆனா நான் தான் புடிபடேல்ல ,ஹ!ஹ!ஹா!!!!!!

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

வணக்கம் அம்பலத்தார், நல்ல பதிவு. எனக்கும் கிளி மேல் அலாதி பிரியம்.. ஆனால் வளர்த்தது இல்லை...

பராசக்தி said... Best Blogger Tips

நெருங்கி பழகி, பிரிவதில் கவலை உண்மைதான் அம்பலத்தார் , பறவைகளை வீட்டில் கூட்டில் அடைத்து வளர்த்து அவைகளின் சுதந்திரத்தை தட்டிப் பறிக்காமல், காட்டுக்கிளிகள் வந்து பசியாறி போகுமாறு தண்ணி தானியம் போன்றவற்றை தோட்டத்தின் நடுவே அமைக்கலாம். இந்த வகையில் ஒவ்வொருநாளும் ஒரே நேரத்தில் வந்து தமக்கான உணவை எடுக்கும் பறவைகளில் முதலிடம் பெறுவது Rainbow lorikeet, மற்றும் Pink Galah, Sulpfur crested cockatoo. Rosella, King parrot போன்றவையும் வரத்தவறுவதில்லை. அவற்றின் வண்ணம் கண்ணைப் பறிக்கும் அழகு. தானியம் போட தாமதமானால், உரிமையோடு கதவைத் தட்டி, கையிலேயே வாங்கி உண்ணும் அளவிற்கு நெருக்கமான கிளிகள் Sydney backyard இல் இருக்கின்றன.

பராசக்தி said... Best Blogger Tips
This comment has been removed by the author.
பராசக்தி said... Best Blogger Tips
This comment has been removed by the author.
பராசக்தி said... Best Blogger Tips

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTYfwdv0fShjrFS7D-n1AakS3aGfQz01jqJ1Ojvtu95iW4a_8co

பராசக்தி said... Best Blogger Tips
This comment has been removed by the author.
பராசக்தி said... Best Blogger Tips
This comment has been removed by the author.
பராசக்தி said... Best Blogger Tips
This comment has been removed by the author.
பராசக்தி said... Best Blogger Tips
This comment has been removed by the author.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!