Friday 3 February 2012

சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால்


காவல் இல்லாத தோட்டங்களை
சுதந்திரமாக மேய்கின்றன
கட்டாக்காலிகள்

கொண்டாட்டமும், களிப்புமாய்
அவைகள்
காணிக்காரனின் சுதந்திரமோ
கம்பிகளுக்குப் பின்னால்

கிழக்குச் சமவெளிகள்
திகட்டிவிட்டதால்
வடக்கில் வாய் நீள்கிறது

கடைவாயூறும்
கட்டாக்காலிகளைக்
கட்டி வைக்கவோ
கல்லால் அடிக்கவோ விடாமல்
காவல் காக்கிறது இறையான்மை

ஊரான் தோட்டத்தில்
மேயும் கட்டாக்காலிகள்
காணிப் பகிர்வையும்
காவல்காரனையும்
விரும்புவதில்லை

தெற்கிலும்
தென்கிழக்கிலும்
கட்டாக்காலிகள்
கால் வைப்பதில்லை

வாலை நீட்டினால் கூட
வேட்டையாடி விடுகின்றன
சிங்கங்கள்
                 
                          ஆக்கம்: -- மன்னார் அமுதன்

6 comments:

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் அமுதன்!சாட்டையடி!!!மேய்ப்பார்,காப்பார் இல்லா நிலமாயிற்றே????

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

ஊரான் தோட்டத்தில்
மேயும் கட்டாக்காலிகள்
காணிப் பகிர்வையும்
காவல்காரனையும் விரும்புவதில்லை//

அமுதன், அருமையான கவிதை. அர்த்தம் பொதிந்த வரிகள். ஒவ்வொரு வரிகளிலும் நாட்டின் யதார்த்தம் அழகாய் தெரிகிறது. வீரியம் நிறைந்த கவிதையும் கூட. வாழ்த்துக்கள்.

Anonymous said... Best Blogger Tips

நிகழ் கால நிஜங்கள் (

குட்டிப்பையன் said... Best Blogger Tips

வணக்கம் பாஸ்
யாதர்த்த கவிதை

alex paranthaman said... Best Blogger Tips

நன்றி தோழர்களே

KANA VARO said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!