Sunday 12 February 2012

நம்மவூரு கிளித்தட்டு / தாச்சிப்போட்டி / யாடு

இணையவெளியூடு ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

கிரிக்கட், கால்பந்து போல யாவருக்கும் பொதுவான விளையாட்டுக்கள் அல்லாமல் தமிழர்கள் மட்டுமே விளையாடும் பல விறுவிறுப்பான விளையாட்டுக்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் விளையாடும் பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இருக்கின்றன. அவையனைத்தையும் ஆராய்ந்து பார்த்தோமானால் நிச்சயம் அவை எமது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்வைத் தருபவையாகத்தான் இருக்கும்.


பொழுதைப்போக்குவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தும் இன்றும் பலர் வீடுகளினுள் சோம்பேறிகளாக முடங்கிக் கிடக்கின்றார்கள். ஆனால் 50 வருடங்களுக்கு முந்திய எங்கள் பேரன், பூட்டன் காலத்திலும் அதற்கு முந்திய காலங்களிலும் எந்தவொரு களியாட்ட நிகழ்வுகளும் இல்லாமல் தங்கள் நேரத்தை திறம்பட எம்முன்னோர் செலவழித்து வந்தார்கள். அவர்களின் அரிய கண்டு பிடிப்புக்கள் தான் எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்கள். வெள்ளைக்காரன் விளையாட்டுக்களில் கிடைக்காத புது அனுபவங்கள் எல்லாம் அதில் கிடைக்கும்.
அப்படியான நமக்கே உரித்தான ஒரு விளையாட்டுத் தான் ”கிளித்தட்டு”. இதனை ஊருக்கு ஊர் தாச்சி, யாடு என பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள். தாச்சி என்றதும் எனக்கு ”கணபதி பிள்ளைத்தாச்சிப்போட்டியில் வெற்றி பெற்றார்” என்ற நக்கல் ஞாபகம் வருவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. (கணபதிப்பிள்ளை தாச்சிப்போட்டியில் என்பது கணபதி பிள்ளைத்தாச்சிப் போட்டி என மாறிவிட்டது). 

இதுவரை கிளித்தட்டு விளையாட்டுப்பற்றி தெரியாதவர்கள் அது பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில், ”கிளித்தட்டு” என கூகிளில் தேடினால் சில லிங்குகள் கிடைக்கும். நான் எழுதினாலும் அதையே தான் எழுத வேண்டும். பிறகு தேவையில்லாமல் காப்பி பேஸ்ட் பிரச்சினை எழும். அதனால் ஆர்வமுள்ளவர்களுக்காக இந்த பதிவின் இறுதியிலேயே அதன் லிங்குகள் சிலவற்றை இணைத்திருக்கின்றேன். மேலதிகமாக வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

கிளித்தட்டு எனக்கு (அல்லது எங்களுக்கு) ஏன் மறக்க முடியாத ஒரு விளையாட்டாக இருக்கின்றது?

இலங்கையில் அதிகம் கவனிக்கப்படும் அல்லது விளையாடப்படும் விளையாட்டு என்றால் அது கிரிக்கட் தான். யாழ்ப்பாணத்திலும் கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக கிரிக்கட்டின் ஆட்சி இருந்து கொண்டேயிருக்கின்றது. (சென்ஜோன்ஸ் vs சென்ரல் big match) ஆனாலும் அதன் வீரியம் கடந்த 15 வருடங்களுக்குள் தான் அதிகம். குச்சொழுங்கைகள் தோறும் கிரிக்கட் விளையாடும் கலாசாரம் இந்த 15 வருடங்களுக்குள் தான் அதிகமானது. முன்பெல்லாம் குச்சொழுங்கைகளில் கிட்டிப்புள்ளும், பிள்ளையார் பேணியும் தான் விளையாடுவோம். இன்னொரு முக்கியமான விளையாட்டு ஒளித்துப்பிடித்து விளையாடுவது. (அருமையான நினைவுகளைத்தரும் இந்த விளையாட்டை தனிப்பதிவாகவே எழுதலாம்) இது தவிர, கிளித்தட்டு.

கிளித்தட்டு வரைமுறைகள் அற்ற சாதாரண விளையாட்டல்ல. இதை விளையாடுவதற்கு பல நெறிமுறைகள் இருக்கின்றன. கிராமிய மட்டங்களில் நடைபெறும் மெய்வல்லுனர் போட்டிகளிலும் கிராமிய பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும் இதனை விளையாடுவார்கள். அதி உச்சமாக ”மாவட்ட மட்டம்” வரை இந்த போட்டிகள் கொண்டு செல்லப்படும்.
வீடுகளில் இதனை விளையாடவேண்டுமாயின் நிச்சயம் விசாலமான முற்றம் இருக்கவேண்டும். நாங்கள் கோண்டவிலில் இருந்தபோது அப்படியான முற்றத்துடன் கூடிய வீடு கிடைக்கப்பெற்றோம். 1985 -1995 காலப்பகுதிகளில் நான் சிறுவன். என்னை ”பொது” என இரண்டு கன்னைகளிலும் சேர்ப்பார்கள். அல்லது ”எல்.பி” என வைத்திருப்பார்கள். (கூட்டத்தோட கூட்டமா ஓடுறது. என்னை யாருமே கவனத்தில எடுக்க மாட்டாங்க. நானும் ஏதோ விளையாடுறதா நினைச்சுக்கிட்டு அங்கை இங்கை பாய்ஞ்சு திரிவன். என்னை எப்பிடியெல்லாம் ஏமாத்தியிருக்காங்க என நினைக்கும் போது ரத்தம் கொதிக்குது. ஹீ ஹீ). அயலவர்களில் அனேகர் 10 வயது முதல் 18 வயது வரை இருந்தார்கள். அவர்கள் அனைவரும் எங்கள் வீட்டு முற்றத்தில் கூடி விடுவார்கள். அவர்கள் அனைவரும் உறவுக்காரர்கள். நாங்கள் மட்டுமே அந்த ஏரியாவில் வாடகைக்கு குடியிருந்தவர்கள். எங்கள் வீட்டு முற்றத்தில் சத்தம் போட்டு விளையாடுவதால் அப்பா எதுவுமே சொல்ல முடியாது.

மாலையில் ஆரம்பித்து மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு இருட்டும் வரை விளையாடுவோம். சிலவேளைகளில் விளையாடிக் கொண்டிருக்கும் போது விமானம் குண்டு வீசுவதற்காக வரும். அந்தவேளை சிதறியோடி ஆளாளுக்கு எங்காவது பதுங்கிக் கொள்வோம். பிறகு விமானம் சென்றதும் திரும்பி வந்து விளையாடுவோம். எப்படியான நெருக்குதல்களுக்கு மத்தியில் எல்லாம் நாங்கள் எங்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்பியிருக்கின்றோம் என நினைக்கும் போது நெஞ்சு கனக்கிறது.

இன்றும் புலம்பெயர் தேசங்களில் இடம்பெறும் விளையாட்டு நிகழ்வுகளின் போது எம்மவர்களால் கிளித்தட்டு விளையாடப்படுகின்றது. இது எங்கள் விளையாட்டு. இதனை நாங்கள் வளர்க்காவிட்டால் வேறு யார் வளர்ப்பது?!

மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கின்றேன்,
அன்புடன்
KANA VARO

அரும்பதங்கள் :
நக்கல் : நகைச்சுவை
குச்சொழுங்கை : மிகச் சிறிய வீதிகள்
கன்னை : விளையாடும் அணி

மேலும் அறிந்து கொள்ள :

21 comments:

காட்டான் said... Best Blogger Tips

வரோவுக்கு தாச்சியா நிண்ட அனுபவம் இல்லைப்போல? அத்தோட விளையாட்டை குழப்ப என்றே சிலர் இருப்பார்கள் (அலாப்பி) தோத்துகொண்டு போறது தெரிஞ்சா அலாப்பி வேலைய காட்டுவார்.. ஹி ஹி !!

காட்டான் said... Best Blogger Tips

ஒரு காலத்தில் இந்த விளையாட்டை தவிர வேறு எந்த விளையாட்டுமே எனக்கு தெரியாது. பள்ளிகூட இடைவேளையில் போட்டி போட்டு விளையாடுவோம்..

பாரம்பரிய விளையாட்டு அறிமுகத்திற்கு நன்றி..!!

தாமரைக்குட்டி said... Best Blogger Tips

ஙே...?

தாமரைக்குட்டி said... Best Blogger Tips

அருமையான நினைவுகளை அசைபோடுவதே அலாதி பிரியம் தான் :-).

தாமரைக்குட்டி said... Best Blogger Tips

இந்த மாதிரி விளையாட்டுக்களை அடுத்த தலைமுறையினர் விளையாடுவதற்கு வாய்பே இல்லை.

குறைந்தது அவர்கள் இப்பிடி ஒரு விளையாட்டு இருந்ததாக தெரிந்து வைத்துக்கொள்ளட்டும்!

பதிவேற்றியதற்கு நன்றிகள்!

மகேந்திரன் said... Best Blogger Tips

வணக்கம் நண்பர் வரோதயன்,
மனம் லயிக்கச் செய்துவிட்டீர்கள்.
நான் அப்படியே சிறகடித்து இருபத்தைந்து
ஆண்டுகள் பின்னால் போய்விட்டேன்.
இதுபோன்ற விளையாட்டுகள் எல்லாம்
இப்போது நினைவுகளில் மட்டுமே...

ஹேமா said... Best Blogger Tips

வரோ...நீங்கள் அழாப்பி அழாப்பி தாச்சி விளையாடேக்க நான் பாத்திருக்கிறன் !

Unknown said... Best Blogger Tips

“கில்லி” என்று நாங்கள் கூறுவோம் கிரிகட் விளையாட்டு அதை மழுங்கடித்து விட்டது என்பது உண்மை!

Unknown said... Best Blogger Tips

கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061

KANA VARO said... Best Blogger Tips

காட்டான் said...
வரோவுக்கு தாச்சியா நிண்ட அனுபவம் இல்லைப்போல? அத்தோட விளையாட்டை குழப்ப என்றே சிலர் இருப்பார்கள் (அலாப்பி) தோத்துகொண்டு போறது தெரிஞ்சா அலாப்பி வேலைய காட்டுவார்.. ஹி ஹி !!//

மாம்ஸ், தாச்சிக்க நிண்ட அனுபவம் நிறைய இருக்கு (சமையலை சொன்னன்) தாச்சியா நிண்ட அனுபவம் குறைவு தான்

KANA VARO said... Best Blogger Tips

காட்டான் said...
ஒரு காலத்தில் இந்த விளையாட்டை தவிர வேறு எந்த விளையாட்டுமே எனக்கு தெரியாது. பள்ளிகூட இடைவேளையில் போட்டி போட்டு விளையாடுவோம்..

பாரம்பரிய விளையாட்டு அறிமுகத்திற்கு நன்றி..!!//

இப்ப மட்டும் நிறைய விளையாட்டுக்கள் தெரியுமோ! சமைக்கவும், துணி துவைக்கவும் தானே தெரியும்.

KANA VARO said... Best Blogger Tips

தாமரைக்குட்டி said...
ஙே...?//

ஐயோ வந்திட்டாண்டா..

KANA VARO said... Best Blogger Tips

தாமரைக்குட்டி said...
அருமையான நினைவுகளை அசைபோடுவதே அலாதி பிரியம் தான் :-).//

பழைய காதல் நினைவுகள் வந்துச்சோ!

KANA VARO said... Best Blogger Tips

தாமரைக்குட்டி said...
இந்த மாதிரி விளையாட்டுக்களை அடுத்த தலைமுறையினர் விளையாடுவதற்கு வாய்பே இல்லை.

குறைந்தது அவர்கள் இப்பிடி ஒரு விளையாட்டு இருந்ததாக தெரிந்து வைத்துக்கொள்ளட்டும்!

பதிவேற்றியதற்கு நன்றிகள்!//

உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிகுடுங்க குட்டி.

KANA VARO said... Best Blogger Tips

மகேந்திரன் said...
வணக்கம் நண்பர் வரோதயன்,
மனம் லயிக்கச் செய்துவிட்டீர்கள்.
நான் அப்படியே சிறகடித்து இருபத்தைந்து
ஆண்டுகள் பின்னால் போய்விட்டேன்.
இதுபோன்ற விளையாட்டுகள் எல்லாம்
இப்போது நினைவுகளில் மட்டுமே...//

அண்ணே வணக்கமண்ணே! ஈழவயலுக்கு உங்கள் கருத்துக்கள் உரமாகின்றது

KANA VARO said... Best Blogger Tips

ஹேமா said...
வரோ...நீங்கள் அழாப்பி அழாப்பி தாச்சி விளையாடேக்க நான் பாத்திருக்கிறன் !//

அக்கா, நீங்க பெரிய அலாப்பி போல! என்னை பார்த்ததெண்டு சொல்லுறீங்களே! ஒருவேளை பார்த்திருப்பீங்களோ! - டவுட்டு

KANA VARO said... Best Blogger Tips

வீடு K.S.சுரேஸ்குமார் said...
“கில்லி” என்று நாங்கள் கூறுவோம் கிரிகட் விளையாட்டு அதை மழுங்கடித்து விட்டது என்பது உண்மை!//

அட! நம்ம விஜயோட படமாச்சே!

KANA VARO said... Best Blogger Tips

வீடு K.S.சுரேஸ்குமார் said...
கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061//

தகவல் அறிந்தேன். விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் வரோ!அந்த நாள் நினைவுகளை மீட்டுக் கொடுத்திருக்கிறீர்கள்.இந்தக் கிளித்தட்டு விளையாட்டு,பெட்டையளும் சேந்திட்டா ஒரே கொண்டாட்டம் தான்.ஹி!ஹி!ஹி!!!!

Yoga.S. said... Best Blogger Tips

வீடு K.S.சுரேஸ்குமார் said...

“கில்லி” என்று நாங்கள் கூறுவோம் கிரிகட் விளையாட்டு அதை மழுங்கடித்து விட்டது என்பது உண்மை!/////தமிழ்நாட்டில்/இந்தியாவில் விளையாடும் முறை வேறு,சுரேஷ்!கிரிக்கட் விளையாட பெரிய இடம் தேவைப்படும்.இந்த விளையாட்டை கோவில் வீதியில் கூட விளையாடுவோம்,விளையாடலாம்!

Kannan said... Best Blogger Tips

ஊரில் இப்போது இதை எல்லாம் எங்கு காண முடிகிறது?

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!