Monday, 12 December 2011

இணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழவயல்!

பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய எம் இனிய உறவுகளே!
எங்கள் வலைப் பதிவுகள் வாயிலாக உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாங்கள் இன்று முதல் ஓர் குழும வலைப் பதிவினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்!இணைய வலையில் அரட்டைகளை மட்டுமல்ல மனதில் கனிந்திருக்கும் இனிதான விடயங்களையும், இலகுவில் எம் நெஞ்சை விட்டகலாத நினைவுகளையும், இலக்கிய நயம் கொஞ்சும் கலக்கலான படைப்புக்களையும், அதிரடி அரசியல் விடயங்களையும் பகிரலாம் எனும் நிலையினையும் தாண்டி கொஞ்சம் சிக்கலான விடயமொன்றினைக் கையிலெடுத்து உங்கள் உள்ளங்களை நாடி எம் இறக்கைகளை விரித்திருக்கின்றோம்!
ஆம் ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டுவியல் விடயங்களை எம் வலையில் ஆவணப்படுத்தி எம் அடுத்த சந்ததியிடம் கொண்டு சேர்க்கும் விடயத்தினை நாம் அனைவரும் கையிலெடுத்திருக்கின்றோம்!வாழும் காலமதில் தன் வாழ்வை நிலை நிறுத்த முடியாது தமிழன் இன்று தள்ளாடிக் கொண்டிருக்கையிலும், அவன் ஆளுவதற்கும் அனுபவிப்பதற்கும் என்றோர் தனி நாடு இல்லை எனும் ஆதங்களிற்கும் அப்பால்; அழிந்து விடும் சில பொக்கிஷங்களை ஆவணப்படுத்திட நாம் அணி சேர்ந்திருக்கிறோம். இன்று ஈழத்தின் இயல்பு நிலை பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அதற்கு அமைவாக அரசியல் கலப்படமற்று எம் மொழியிற்கான ஓர் பாதையில் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்!

காலப் பெரு வெளியில் கட்டுண்டு எம் வாழ்வு கரைந்துருகிப் போனாலும் இந்த ஞாலத்தில் வாழத் துடிக்கும் எம் சந்ததியிடமிருந்து எம் மொழியானது இன்றைய இலங்கைத் திரு நாட்டின் அரசியற் சூழலினால் அந்நியப்பட்டு விடுமோ எனும் அச்சம் ஈழ மக்கள் அனைவர் மனங்களிலுமிருக்கின்றது. இன்றைய மொழிக் கலப்பால் பண்டைத் தமிழ்ச் சொற்கள், நெஞ்சில் நினைவாய் தவழும் இலக்கிய மரபுகள், சந்தம் விஞ்சி எம் மனதைக் கொஞ்சி மகிழ்விக்க வல்ல ஈழத்து நாட்டார் பாடல்கள்,உலகில் இன்று சிறப்பிக்கப்படும் செம் மொழி எனும் அடை மொழிக்குள் தன்னை உள்ளடக்கியிருக்கும் எம் தமிழ் மொழியில் ஈழத்திற்கான அடையாளமாக இருக்கும் தனித்துவமான பிரதேசச் சொற்கள் எனப் பல விடயங்கள் எம்மை விட்டு அந்நியப்பட்டு விடுமோ எனும் அச்சம் உலகில் பரந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களில் இருக்கின்றது.

இணைய வலையில் ஈழத்துக் கலை, கலாச்சார மொழிப் பண்பாட்டு அம்சங்களை உங்கள் மனதைக் கவரும் வண்ணம் வலையேற்றும் நாங்கள் எமை நாடி வரும் அதிகளவான தமிழ் வாசக நெஞ்சங்கள் பரந்து வாழும் தமிழத்து மொழி வழக்கினைக் கருத்திற் கொண்டு எம் பதிவுகளில் வரும் ஈழத்து அடையாளங்கள் ஒவ்வொன்றினையும் தமிழக உள்ளங்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் இயல்புத் தமிழ் நடையிலும் பகிரவுள்ளோம் எனும் இனிப்பான சேதியினையும் இங்கே சொல்லிக் கொள்வதில் அகம் மகிழ்கின்றோம்! திசைக்கு ஒன்றாய் பிரிந்து வாழ்ந்தாலும் ஈழத்துக் காற்றை இன்றும் சுவாசித்துக் கொண்டிருக்கும் உறவுகள் நாம் இந்த முயற்சியில் இணைந்திருக்கின்றோம்!

இங்கே பிரதேசவாதம் எனும் இராப் பாடலுக்கு சிறிதளவேனும் இடமில்லை எனும் மகிழ்ச்சியான செய்தியினையும் இந் நன் நாளில் பகிர்ந்து கொள்கின்றோம். ஈழத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள்,மத்தியமலைநாடு, மற்றும் புத்தளம் - சிலாபம் ஆகிய பிரதேசங்களையும் ஏனைய இஸ்லாமியச் சொந்தங்கள் செறிந்து வாழும் இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள பதிவர்களையும் இவ் அரிய முயற்சியில் அரவணைத்தும் நாம் செயற்படவிருக்கின்றோம் எனும் நற் சேதியினையும் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம். இணையத்தில் மட்டும் இந்த மொழிக் காப்புப் பண்ணியினை நாம் செய்து விட்டு நின்று விடப் போவதில்லை! 

ஈழ வயலினூடே உங்கள் இதயங்களை நாடி வரும் ஒவ்வோர் பதிவுகளையும் தொகுத்து நூலுருவிலேற்றி ஈழத்திலும், தமிழகத்திலும், உலகெங்கும் தமிழ் உறவுகள் பரந்து வாழும் பகுதிகளிலும் தவழ விடலாம் எனவும் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். எமது பதிவுகள் தொடர்பான உங்களின் கருத்துக்களையும், ஈழவயல் எனும் வலைப் பதிவினூடாக நாம் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் அன்பு உள்ளங்களே! வாசகர்களாக நீங்கள் உங்கள் கால்களை இங்கே பதிக்கும் அதே வேளை எம் படைப்புக்கள் தொடர்பான விமர்சகர்களாகவும் உங்களின் தார்மீகப் பங்களிப்புக்களை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா?

இணையத்தில் ஈழத்து மண் வாசத்தை சுமந்து வரும் ஈழ வயல்! 
உங்கள் இதயதங்களைக் கொள்ளையிடப் போகும் தமிழ் இயல்! 

எங்கள் வண்ணத் தமிழ் அம்சங்களை வார்த்தைகளிலேற்றி 
உங்கள் எண்ணங்களைப் பெற்று எம் தமிழுக்கான
அடுத்த கட்டப் பணியினைச் செய்திட அணி சேந்துள்ளோம்! 
வரவேற்று கரங் கொடுத்தால் நீங்கள் ஓர் வாசகர்! 
விரல் கொண்டு எம் படைப்புக்கள் மெருகேறிட
மென்மையாக வருடினால் நீங்கள் ஓர் விமர்சகர்!

ஈழவயல் எனும் வலைப் பதிவினை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும், விவாதங்களையும் முன்னெடுத்த பதிவர்களினையும் இந் நேரத்தில் நினைவு கூருவதில் பெருமையும் பேருவகையும் அடைகின்றோம்.
ஈழ வயல் எனும் குழும வலைப் பதிவு ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் எனும் ஆலோசனையினை வழங்கியவர்
அகசியம் வலைப் பதிவின் சொந்தக்காரன் கானா வரோதயன் அவர்கள்!
வரோதயன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் நடாத்தி இம் முயற்சி சிறப்படைய பங்களிப்பு நல்கியோர்
நண்பர்கள் வலைப் பதிவின் சொந்தக்காரர் KSS.Rajh  மற்றும்;
சிறகுகள் வலைப் பதிவின் சொந்க்காரர் மதுரன்
காட்டான் வலைப் பதிவின் சொந்தக்காரர் காட்டான் 
நிகழ்வுகள் வலைப் பதிவின் சொந்தக்காரர் கந்தசாமி
தமிழ் ஆதி வலைப் பதிவின் சொந்தக்காரர் பவுடர் ஸ்டார் ஐடியாமணி
அம்பலத்தார் பக்கங்களின் சொந்தக்காரர் அம்பலத்தார்
கற்றது தமிழ் வலைப் பதிவின் சொந்தக்காரர் துஸ்யந்தன்
மதியோடை வலைப் பதிவின் சொந்தக்காரர் மதிசுதா,
ஆகுலன் கனவுகள் வலைப் பதிவின் சொந்தக்காரர் ஆகுலன்,
நாற்று வலைப் பதிவின் சொந்தக்காரர் நிரூபன் ஆகிய பதிவர்களோடு முக நூலில் எம்மோடு கலந்துரையாடல்களில் பங்களிப்புக்களை நல்கிய பதிவர் மைந்தன் சிவா, சந்துரு குரு, குட்டிப் பையன், விண்ணாணம் விநாசியார், ஈழத்து பூதந்தேவனார், ஆகியோரையும் இந் நேரத்தில் உங்கள் முன் அறிமுகப்படுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சியடைகின்றோம். 

தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்
ஈழவயல் குழுவினர்!
நன்றி;
வணக்கம்!! 

29 comments:

ஆமினா said... Best Blogger Tips

முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

@ஆமினா

முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
//

வணக்கமுங்க சகோதரி! முதன் முதலா ஓடியாந்து சட்டு புட்டென்று கமெண்ட் போட்டிட்டு போயிருக்கிறீங்க! ஒங்கட வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க!

Anonymous said... Best Blogger Tips

வயலில் முதன் முதலாக நாற்று நடப்பட்டுள்ளது; அறுவடை பெருக வாழ்த்துக்கள். களைகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்கள்...

மதுரன் said... Best Blogger Tips

@கந்தசாமி.வாங்கோ கந்தசாமி..
கட்டாயம் களைகளுக்கு இங்கே இடம் இருக்காது

Anonymous said... Best Blogger Tips

///வணக்கமுங்க சகோதரி! முதன் முதலா ஓடியாந்து சட்டு புட்டென்று கமெண்ட் போட்டிட்டு போயிருக்கிறீங்க! ஒங்கட வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க!//// வணக்கமிங்க அக்கா,முத முதலா ஓடியந்து சட்டு புட்டெண்டு கமெண்ட போட்டுட்டு போயிருக்கிறியள். உங்கட வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றியுங்க! )

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

@கந்தசாமி.

வயலில் முதன் முதலாக நாற்று நடப்பட்டுள்ளது; அறுவடை பெருக வாழ்த்துக்கள். களைகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்கள்...
//

வாருமப்பா தம்பி கந்து!
ரொம்பச் சந்தோசமா இருக்கு! உம்மடை வாழ்த்து புல்லரிக்க வைக்கு!
நாற்று நட்டிருக்கிறமோ? ஹி...ஹி...
அப்ப அறுவடைக்காக காத்திருக்கிறீங்க என்று சொல்லுங்க!

குட்டிப்பையன் said... Best Blogger Tips

ஆமாம் கந்து இங்கே களைகளுக்கு இடம் இருக்காது நல்ல விதைகள் மாத்திரமே இங்கே விதைக்கப்படும்

எமது தளத்திற்கு முதன் முதலில் கருத்து தெரிவித்த ஆமினா அக்காவுக்கு நன்றி

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் !
ஈழ வயல் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்..

♔ம.தி.சுதா♔ said... Best Blogger Tips

பதிவுலகத்துக்கு வந்ததில் இருந்து ஏதாவது சாதிக்கணும் சாதிக்கணும் என ஆவலாயிருந்தேன்..

நல்லதொரு சந்தர்ப்பம் பயன்படுத்திக் கொள்கிறேன் என் நண்பர் அனைவருக்கும் நன்றி...

துஷ்யந்தன் said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் (நமக்கு நாமே வாழ்த்து சொல்லுறமோ.. ஹீ ஹீ)

துஷ்யந்தன் said... Best Blogger Tips

ரெம்ப அழகா இருக்கு... ஈழ வயல் :)
தமிழ்மணத்தில் வோட் போடமுடியவில்லை.... யாராவது பாருங்கோ பிரெண்ட்ஸ் :)

ஆகுலன் said... Best Blogger Tips

அனைவர்க்கும் வாழ்த்துக்கள்......

குட்டிப்பையன் said... Best Blogger Tips

@துஷ்யந்தன்
////ரெம்ப அழகா இருக்கு... ஈழ வயல் :)
தமிழ்மணத்தில் வோட் போடமுடியவில்லை.... யாராவது பாருங்கோ பிரெண்ட்ஸ் :////

தமிழ்மணம் இன்னும் எமது தளத்தை இணைக்கவில்லை இணைத்ததும் ஓட்டு போடலாம் துஷி வெயிட் பண்ணுங்க

K.s.s.Rajh said... Best Blogger Tips

ஆரம்பமே சிறப்பாக இருக்கு ஈழவயல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Powder Star - Dr. ஐடியாமணி said... Best Blogger Tips

முதலில் வலையினை டிசைன் செய்த கரங்களுக்கு.... இதோ பிடியுங்கள் பூங்கொத்து! வாழ்த்துக்கள்!

ஈழவயல், அதிக விளைச்சல் தர வாழ்த்துக்கள்! எமது இந்த வயல் நன்றாக விளைய, என்னால் முடிந்தளவு யூரியா, அமோனியா, பொஸ்பரஸ் எல்லாம் போடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.:-)

மேலும் பெரும்போகம் சிறுபோகம் என அனைத்துப் போகங்களிலும் எமது ஈழவயல் விளைந்து, நலம் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்!

இந்த வயலில் உழவு வேலை, பாத்தி கட்டும் வேலை, நீர் பாய்ச்சும் வேலை, பன்றிக் காவல் காக்கும் வேலை என்று ஏகப்பட்ட வேலை இருக்கு!

நண்பர்களாகிய நாம் ஆடிப்பாடி வேலை செய்வோம்! அலுப்பிருக்காது!!

அத்துடன் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது அல்லவா? எனவே காலப்போக்கில் பெண் பதிவர்களையும் உள்வாங்குவோம்!( எனது முதல் தெரிவு ஹேமா ):-)

இந்த வயல் நன்கு விளைய வேண்டும்!

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

கோகுல் said... Best Blogger Tips

வாழ்த்துகள்!

கோகுல் said... Best Blogger Tips

word verification நீக்கலாமே!

NAN RAAVANAN said... Best Blogger Tips

நண்பர்களே!!! உங்கள் கூட்டுமுயட்சிக்கு என் வாழ்த்துகள் ....

பராசக்தி said... Best Blogger Tips

புதிய வலைப்பூ,வாழ்த்துக்கள் வளரட்டும் நாற்றுக்கள்! புதிதாய் எதிபார்க்கிறோம்.

சம்பத் குமார் said... Best Blogger Tips

உங்களின் அரிய முயற்சிக்கு பாராட்டுக்கல்

இந்த வயலில் எப்போதும் முப்போகம் விளைய வாழ்த்துகின்றேன்

நன்றி

Yoga.S.FR said... Best Blogger Tips

வணக்கம்!
ஈழ வயல் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்!நாற்றுக்கள் வளரட்டும்.

Eelavan Eelavan said... Best Blogger Tips

வரவு நல்வரவாகட்டும்!

ஈழவயல் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

100+ ways to earn said... Best Blogger Tips

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

கொலைவெறி டி

ஹேமா said... Best Blogger Tips

ஈழவயல் உழவர்களுக்கு வணக்கம். பதிவுகளில் எம் மண் வாசனை சுகந்தமாய் வீசட்டும்.வயல் செழிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள் !

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

அருமையான முயற்சி.. வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) said... Best Blogger Tips

முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

புலவர் சா இராமாநுசம் said... Best Blogger Tips

ஈழவயல் சிறக்க
ஈழநாடு பிறக்க
என்றும் என் வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

sksrsolution said... Best Blogger Tips

ஈழத்திருநாட்டின் அழகு நிறைந்த வயல் வெளித்தெனறல் போல் துாய தென்றல் வீச கூடியது எம்தேசத்தில் மட்டும் என்பதில் ஜயம் இல்லை.எம்மண்ணில் விளைந்த பயிர் அல்லவா , உங்கள் படைப்புகளும் சிறப்புற வாழ்த்துகின்றேன் தென்றல் காற்றாய்.

அன்புடன்
சிவனடியான்

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said... Best Blogger Tips

வணக்கம் நண்பரே
தங்களது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியுள்ளேன் நன்றி
http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_03.html

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!