Monday 19 December 2011

சிங்கிணி நோனாவும் ஆத்தாடி பாவாடையும்...!

ணக்கம் உறவுகளே! அனைவரும் நலம் தானே!
எமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா? இல்லைத் தானே! நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் செய்த குறும்புகள் எவையுமே என்றுமே எம் மனதை விட்டு அகலாது! அது போல, நாம் உடுத்திய உடைகள், பழகிய நண்பர்கள், பாடிய பாடல்கள் என்று எவையுமே மறக்க முடியாதவை! இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது நாம் சிறிய வயதில் பாடித் திரிந்த பாடல்கள் பற்றி!
நான் சிறுவனாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் நிற்பதில்லை! அம்மம்மா வீட்டில்தான் போய் நிற்பேன்! அங்கு மாமாக்கள், சித்திமார், அத்தைமார் எல்லோரும் நிற்பார்கள்! என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள், மச்சாள்மார், மச்சான்மார் என்று எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம்! அப்போது நாங்கள் பல பாடல்கள் படிப்போம்!வட்டமாக சப்பாணி கட்டிக்கொண்டு கீழே இருந்து ஒருவரது தோளில் கைபோட்டுக்கொண்டு சாய்ந்து சாய்ந்து ஒரு பாட்டு பாடுவோம்! வலப்பக்கம் தீபா மச்சாளும், இடப்பக்கம் கௌரி மச்சாளும் இருக்க, நான் நடுவிலே இருந்து, அவர்களது தோளிலே கைபோட்டுக்கொண்டு ( ஹி ஹி ஹி சின்ன வயசில மட்டும்தான்! ) ஒரு பாட்டுப் படிப்போம்!

“ சிங்கிணி நோனா சந்தனக் கட்டி
அப்போ டிப்போ யார் கோ”

இந்தப் பாடலை பின்னர், கை மடக்கி விளையாடும் ஒரு விளையாட்டுக்கும் பயன்படுத்துவோம்!

இன்னொரு பாடல்!

“ குமார் குமார் லைட் அடி
கோழிக் குஞ்சுக்கு லைட் அடி
எத்தினை ரூபா சம்பளம்
பத்து ரூபா சம்பளம்”

இதுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியாது! ஆனால் படிப்போம்! அதுபோல இன்னொரு பாட்டு, பாடப்புத்தகத்திலே இருந்தது,

“ என்ன பிடிக்கிறாய் அந்தோனி
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
பொத்திப் பொத்திப் பிடி அந்தோனி
பூறிக்கொண்டோடுது சிஞ்ஞோரே”

இப்படியே பாடிப் பாடி விளையாடிக் கொண்டு இருக்கும் போது, யாராவது வெடி விட்டு விடுவார்கள்! நாங்கள் எல்லோரும் மூக்கைப் பொத்துவோம்! விட்டவர் மூக்கைப் பொத்தினால், மூக்கிலே கட்டி வரும் என்று வெருட்டி வைத்திருப்போம்! அதனால் விட்டவர் மூக்கைப் பொத்துவதா விடுவதா என்ற குழப்பத்தில் இருப்பார்! உடனே நாம் அவரை இலகுவாகக் கண்டு பிடித்து விடுவோம்! இதற்கும் ஒரு பாட்டும் வைத்திருக்கிறோம்! அதாவது குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் ( வெடி விட்டவர் ). அதற்கு அடையாள அணிவகுப்பு நடத்துவது போல, நாமும் எல்லோரையும் அருகில் அழைத்து, அதில் ஒருவர், பின் வருமாறு பாடுவார்,

“ சுட்ட பிலாக்காய் வெடிக்க வெடிக்க
சூடும் பாலும் வத்த வத்த
நானும் கடவுளும் சிரிக்கலாம்!
மற்றவர்கள் சிரிக்க கூடாது!”

இப்படிச் சொன்னவுடன் யாருமே சிரிக்காமல் வாயைப் பொத்திக்கொண்டு, இருப்போம்! இதில் வெடி விட்டவருக்கு சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கும்! பெரிய கஷ்டப்பட்டு அடக்குவார்! அல்லது சிரித்தே விடுவார்! உடனே நாம் அவரை மிக இலகுவாகக் கண்டு பிடித்து விடுவோம்!
மேலும்,

“ நெய் நெய் நெய்
அரைப்போத்தல் நெய்
கட்டப்பொம்மன் சொன்னதெல்லாம்
பொய் பொய் பொய்”

என்று ஒரு பாட்டுப் பாடுவோம்! இதிலே கட்டப்பொம்மன் என்பது யாரைக் குறிக்கும்? ஒருவேளை வீரபாண்டிய கட்டப்பொம்மனைக் குறிக்குமோ? ஹா ஹா ஹா எங்களுக்கு விபரம் தெரியாது! ஆனாலும் பாடுவோம்!
இந்தப் பாடல்கள் எல்லாம் பாடி முடிந்து ஓரளவு வளர்ந்து 7 , 8 வயது வந்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக சினிமாப் பாடல்கள் பக்கம் எமது கவனம் திரும்பும்! சினிமாவிலே வரும் வேடிக்கையான பாடல்கள் முதலில் எம்மைக் கவரும்! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது!

“ ராதே என் ராதே வாராதே” என்று ஒரு பாட்டு! அதிலே ஒரு பொம்மையும் சேர்ந்து பாடும்! நாங்கள் அந்தப் பொம்மை போலப் பாடி மகிழ்வோம்! எப்போது வானொலியில் அந்தப் பாடல் வரும் என்று காத்திருந்துவிட்டு, ஓடிப்போய் கேட்போம்! அது ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் இடம்பெற்ற பாடல் என்றும் அதில் நடித்தவர் கமல்ஹாசன் என்றும் அப்போது எமக்குத் தெரியாது!

இன்னொரு பாடல் “ ஆத்தாடி பாவாடை காத்தாட” என்று ஆரம்பிக்கும்! அந்தப் பாடல் காட்சி இன்றும் நன்றாக நினைவிருக்கிறது! கதாநாயகி குளிப்பார்! கதாநாயகன் எட்டி எட்டிப் பார்த்து பாட்டுப் படிப்பார்! நான் அம்மாவிடம் போய் “ அம்மா... அந்த அன்ரி குளிக்கிறத அந்த மாமா எட்டிப் பார்க்கிறார்” என்று முறைப்பாடாகச் சொன்னேனாம்! அம்மா சொன்னாராம்  
“ அந்த மாமாவுக்கு அப்பா அடிபோடுவார்! நீங்கள் போய்ப் படியுங்கோ” என்று! பெரியவனாக வளர்ந்த போது, அந்தப் பாடலில் நடித்தவர் முரளி என்று தெரிய வந்தது! முரளியையும் பிடித்துப் போனது !

அந்தக் காலத்தில் இந்தப் பாட்டு வானொலியில் போனால் நாம் மிகவும் ரசித்துக் கேட்போம்! கூடவே சிரிப்பும் வரும்! பின்னொரு நாளில் எனது மச்சாள் குளிக்கும் போது நான் எட்டிப்பார்த்து, அம்மம்மாவிடம் அடி வாங்கியதை இன்று வரை மறக்கவில்லை!

பாருங்கள் அந்தக் காலத்திலேயே சினிமா சிறுவர்களாகிய எம்மை எந்தளவு பாதித்துள்ளது என்று! நடிகர் முரளி காலமானபோது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது இந்தப் பாடலும், மச்சாளை எட்டிப் பார்த்த அந்த சம்பவமும் தான்! இப்பாடலில் முரளியுடன் வருபவர் நடிகை குயிலி!


அதன் பின்னர் கொஞ்சம் வளரத்தொடங்கியதும் பாடல்களின் ரசனை மாறியது! மீசை அரும்பும் பருவம்..... காதல் பாடல்களில் மனம் லயிக்கத் தொடங்கியது! அந்த சுவையான அனுபவங்கள் இன்னொரு நாளில்..........!

புகைப்படங்கள் - நன்றி கூகுள்!

27 comments:

சுதா SJ said... Best Blogger Tips

என் மனசும் அந்த சின்ன வயசுக்கு போயிட்டுதே...... :) மனசை தொட்டுவிட்டது பதிவு.... இதில் வரும் பாடல்களை நானும் பாடியிருக்கேன்... ஹா ஹா... அந்த காலங்கள் எவ்ளோ இனிமையானது.... ஹும் இப்போ பெருமுச்சு மட்டும்தான் விட முடியுது :(

சுதா SJ said... Best Blogger Tips

வலப்பக்கம் தீபா மச்சாளும், இடப்பக்கம் கௌரி மச்சாளும் இருக்க, நான் நடுவிலே இருந்து, அவர்களது தோளிலே கைபோட்டுக்கொண்டு ( ஹி ஹி ஹி சின்ன வயசில மட்டும்தான்! ) <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

ஹீ ஹீ.... நம்பிட்டோம் மக்கா.....

சுதா SJ said... Best Blogger Tips

வலப்பக்கம் தீபா மச்சாளும், இடப்பக்கம் கௌரி மச்சாளும் இருக்க, நான் நடுவிலே இருந்து, அவர்களது தோளிலே கைபோட்டுக்கொண்டு ( ஹி ஹி ஹி சின்ன வயசில மட்டும்தான்! ) <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

ஹீ ஹீ.... நம்பிட்டோம் மக்கா.....

சுதா SJ said... Best Blogger Tips

பின்னொரு நாளில் எனது மச்சாள் குளிக்கும் போது நான் எட்டிப்பார்த்து, அம்மம்மாவிடம் அடிவாங்கியதை இன்றுவரை மறக்கவில்லை!<<<<<

அட இப்போத்தான் உப்படி என்றால்... அப்பாவும் இப்படித்தானா??? அவ்வவ்

KANA VARO said... Best Blogger Tips

வோட் பண்ணிட்டன். பின்னூட்டத்துக்கு பிறகு வாறன் தேவனார்

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் பூந்தேவனார்...!
பதிவு என்னை சிறு வயதுக்கு அழைத்து செல்கின்றது..
 சாப்பாட்டுக்கும் நித்திரைக்குமே வீட்டுக்குள் வந்த இனிமையான காலங்கள் அவை..

வாழ்த்துக்கள்.!!

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் ஐயா,
உங்களுக்கு மெமறி பவர் ரொம்ப.............அதிகம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சரியில்ல....... said... Best Blogger Tips

நாங்கெல்லாம் எல்.கே.ஜி லயே ரவுடி... @மணியண்ண.

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Best Blogger Tips

அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

நிரூபன் said... Best Blogger Tips

ஐயா இதுவும் நல்ல பதிவு தான்.
எங்கட நட்டாங்கண்டல், பாண்டியன்குளப் பக்கம்
“பாப்பா பாப்பா ஓடாதே!
பந்து ரெண்டும் ஆடுது
நானா நானா ஆட்டினேன்
தானா தானா ஆடுது!....

இப்படியும் ஒரு பாட்டுப் படிப்பம்.

பெரியவங்க ஆனதுக்கு அப்புறம் இந்தப் பாடலுக்கான அர்த்தம் வேற மாதிரி விளங்கிச்சு.

Mathuran said... Best Blogger Tips

வணக்கம் ஐயா பூதம்!
எப்பிடி ஐயா எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கிறியள்.

அதெல்லாம் ஒரு காலம்

Mathuran said... Best Blogger Tips

//பின்னொரு நாளில் எனது மச்சாள் குளிக்கும் போது நான் எட்டிப்பார்த்து, அம்மம்மாவிடம் அடி வாங்கியதை இன்று வரை மறக்கவில்லை!//

ஹி ஹி அந்த பழக்கம்தான் இப்ப ஹன்சிகா வரைக்கும் வந்து நிக்குது.. அப்பவே சூடு போட்டிருந்தா எனக்கும் மைந்தனுக்கும் எவ்வளவு ஈஸியா இருந்திருக்கும்

நிரூபன் said... Best Blogger Tips

அப்புறமா இன்னொரு முக்கியமான பாட்டை தவற விட்டிட்டீங்க..
நிலா நிலா ஓடிவா! நில்லாமல் ஓடிவா...

நிரூபன் said... Best Blogger Tips

மதுரன் said...
//பின்னொரு நாளில் எனது மச்சாள் குளிக்கும் போது நான் எட்டிப்பார்த்து, அம்மம்மாவிடம் அடி வாங்கியதை இன்று வரை மறக்கவில்லை!//

ஹி ஹி அந்த பழக்கம்தான் இப்ப ஹன்சிகா வரைக்கும் வந்து நிக்குது.. அப்பவே சூடு போட்டிருந்தா எனக்கும் மைந்தனுக்கும் எவ்வளவு ஈஸியா இருந்திருக்கும்//

கொய்யாலே...அஞ்சில வளையக் கேட்கிற ஆளுங்களை ரசனையைப் பாருங்க..

நீங்க எல்லாம் அப்ப சூடு வாங்கியிருந்தா ஊரில ஒரு பொண்ணையும் விட்டு வைச்சிருக்க மாட்டியள்!

நிரூபன் said... Best Blogger Tips

http://www.youtube.com/watch?v=rT88g7cHEAM

இந்த இணைப்பில உள்ள பாடலும் எம் சிறு வயசு ஞாபகங்களை கண் முன்னே காட்சிகளாய் விரிக்கின்றது.

நிரூபன் said... Best Blogger Tips

பூதம், இன்னும் நிறையப் பாட்டு இருக்கு. ஆனால் நினைவிற்கு வரமாட்டேங்குது! பகிர்விற்கு நன்றி.

Unknown said... Best Blogger Tips

என்ன ஞாபகங்கள்!!!அருமையான இரைமீட்டல்!!

K.s.s.Rajh said... Best Blogger Tips

////அந்தக் காலத்தில் இந்தப் பாட்டு வானொலியில் போனால் நாம் மிகவும் ரசித்துக் கேட்போம்! கூடவே சிரிப்பும் வரும்! பின்னொரு நாளில் எனது மச்சாள் குளிக்கும் போது நான் எட்டிப்பார்த்து, அம்மம்மாவிடம் அடி வாங்கியதை இன்று வரை மறக்கவில்லை!////

ஹா.ஹா.ஹா.ஹா.............
பூதத்தேவனார் நல்லாத்தான் பாத்து இருக்கிறீங்க

K.s.s.Rajh said... Best Blogger Tips

////நடிகை குயிலி!////

ஹி.ஹி.ஹி.ஹி மறக்க கூடிய நடிகையா குயிலி ஒரு வித்தியாசமான அழகி நமக்கு ஆண்டிதான் என்ன பண்ணுறது அந்த வயதில் ரசித்தோம் அவ்வ்வ்வ்வ்

Unknown said... Best Blogger Tips

ஹாஹா பழய விஷயங்கள் பல ஞாபகம் வந்து விட்டது...அழகா சொல்லி இருக்கீங்க மாப்ள!

காட்டான் said... Best Blogger Tips

ஆத்தாடி பாவாட காத்தாட பாட்டை படத்தில் பார்பதையும் விட இளையராசாவின் குரலில் கேட்பது இன்னும் அழகு..!!!!!!

ஹேமா said... Best Blogger Tips

உண்மையில் எனக்கு இந்த விளையாட்டுத் தெரியேல்ல !

பாடல் நினைவுகள் திரும்பவும் வீட்டு முற்றம் ஞாபகம் வருது !

துஷிக்குட்டி...இனி உங்களை நான் குட்டி சொல்ல உதைக்கப்போறாங்கள் எல்லாரும்.சுவிஸுக்கு பொல்லு வரப்போகுது !

ad said... Best Blogger Tips

நினைவிருக்கு.ஆனால் அந்த கட்டபொம்மன் வரி கேள்விப்பட்டதேயில்ல.
படிக்கும்போது அப்பிடியே சின்னவயசுக்கே போய் வந்தாச்சு.

Unknown said... Best Blogger Tips

ஆகா வள்ளி, தெய்வானை சமேதராக தீபா, கௌரி மச்சாள்மார்களுக்கிடையே!

நாட்டார் பாடல்கள் என்றும் இரசிக்கக் கூடியவையே, அருமையான நினைவு மீட்டல்.

"ஈழத்துப் பூதந்தேவனார்" எனும் பெயரில் கிழக்கில் மூத்த எழுத்தாளர் ஒருவர் இருந்தார், பிற்காலத்தில் மேற்கத்திய நாட்டில் வாழ்வதாக அறிந்தேன், "ஆத்தாடி பாவாடை காத்தாட..." எனும் பாடல் அவருடைய வாலிப வயதில் வெளிவந்திருக்கும் என நினைக்கின்றேன், " சிங்கிணி நோனாவும் ஆத்தாடி பாவாடையும்..!" எனும் பதிவை வாசிக்கும் போது மூத்த எழுத்தாளராக இருப்பதற்கான சந்தற்பம் குறைவாக உள்ளது, அவர் இல்லையெனில் எதற்கும் பெயரில் கொஞ்சம் கவனம் எடுப்பது நல்லது.

KANA VARO said... Best Blogger Tips

பதிவு அருமையான ஞாபக மீட்டல். அந்த குமார் குமார் லைட் அடி.. பாடல் யாழ்ப்பாணத்தவர்களின் (சிலவேளை தமிழர்களின்) பரம்பரைப்பாடல் போல..

Unknown said... Best Blogger Tips

நீங்கள் அப்பவே இப்படித்தானா? இப்ப எப்படி? சப்பா நினைச்சே பார்க்க முடியல

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

வணக்கம் பூதமையா, அருமையான பதிவு.. அனைவரைப்போலவும் நானும் தானுங்க வாய புளக்கிரன்.. எப்பிடி உங்களால இவ்வளத்தையும் ஞாபகம் வச்சிருக்க முடியுது.. நான் காலம சாப்பிட்ட சாப்பாட்டையே இப்ப மறந்துட்டன்.. ஹி ஹி ஹி

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!