Tuesday, 20 December 2011

சொல்லுக்குச் சுதி சேர்த்த வில்லுப் பாட்டு!

ஈழ வயலினைத் தரிசிக்க வந்திருக்கும் தமிழ் இதயங்களுக்கு இனிய வணக்கம்!
வில்லுப் பாட்டு என்பது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் தானே! எம் பால்ய காலத்தில் பள்ளியில் படிக்கையில், கோவில் திருவிழாக்களில், பொது நிகழ்வுகளில் இந்த வில்லுப் பாட்டினைக் கண்டு ரசித்திருக்கும். ஏன் நாங்களும் சில வேளை வில்லில் சுதி சேர்த்துப் பாடியிருப்போம் அல்லவா? வில்லுப் பாட்டு என்பது எவ்வாறு ஆரம்பிக்கும் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் சின்ன ஒரு நினைவு மீட்டலுக்காய் இவ்வாறு தான் ஆரம்பிக்கும் எனக் கூறிக் கொள்கின்றேன்.
தந்தனத் தோம் என்று சொல்லியே..
வில்லினை (வில்லிசை) பாட வந்தருள்வாய் கணபதியே..!
வரம் தந்தருள்வாய் கணபதியே!(கணபதியை விரும்பின மாதிரி நீங்கள் ஸ்ருதி மாற்றிப் பாடிக் கொள்ளவும் முடியும்)!
எம்மால் மறக்க முடியாத பல நிகழ்வுகளை இந்த ஈழத்து மண் தந்திருக்கிறது. எத்தனையோ சந்தோசங்கள், கவலைகள் உட்பட எழுத்தில் சொற்களில் இலகுவில் வடிக்க முடியாத பிரிவுகளையும், வடுக்களையும் எம் மண் எமக்கு அளித்திருக்கிறது. இந்த பதிவில் என்னால் மறக்க முடியாத வில்லு பாட்டு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எனக்கு இந்த மறக்க முடியாத அனுபவம் ஏற்பட்டது. முள்ளியவளை கலை மகள் வித்தியாலயத்தின் நவராத்திரி பூசையன்று தான் என்னுடைய இந்த கன்னி வில்லுப் பாட்டும் அரங்கேறியது. 

எம்மை ஒழுங்குபடுத்தி, வில்லுப் பாட்டிற்குத் தயார் செய்த ஆசிரியர் பெயர் சரியாக ஞாபகம் இல்லை. அவரின் வழி காட்டலுடன் எனது மற்றும் எனது நண்பர்களின் பங்களிப்புடன் மேடையேறியது எனது முதல் வில்லிசை. குசேலநாயனாரின் வாழ்கை வரலாற்றினை சொல்லிசை கலந்து வில்லிசை மூலம் அரங்கேற்றத் தொடங்கினோம். இந்த வில்லுப் பாட்டில் பிடித்த விடயம்; எம்மால் பாவிக்க பட்ட பாடல்களில் அதிகளவானவை சினிமாப் பாடல்களை உள்ளடக்கி எழுதப்பட்டவையாகும்.

உதாரணமாக குசேலநாயனார் வறுமையில் தவிர்க்கும் பொழுது அவரது மனைவி அவரின் தாலியை குசேலரிடம் கொடுத்து உணவு வாங்கி வர சொல்லுவர். இந்த இடத்தில் நாங்கள் "தாய் மனது தங்கம் நான்அறிஞ்ச தெய்வம் நன்றி சொல்ல போதாதம்மா ஏழேழு ஜென்மம்" எனும் பாடலைப் பயன்படுத்தியிருந்தோம். அதை விட எமது வில்லு பாட்டின் சிறப்பிற்கு இன்னோர் காரணம். நாம் உபயோகித்த இசை கருவிகள் மற்றும் உபகரணங்கள்.
பாடசாலையில் அரங்கேற்றும் போது எமக்கு சரியான பொருடகள் கிடைக்கவில்லை. சின்ன பொடியங்கள் எனும் பய மிகுதியால் நாங்கள் எல்லோரும் இன்றைக்குச் செத்தோம் என மனதிற்குள் பயம் வாட்டத் தான் மேடைக்கு ஏறினோம். மிருதங்கதிற்கு பதிலாக பெரிய அலுமினிய பானையினை உபயோகித்தோம். மிருந்தங்கம் அடித்த எம் நண்பனுக்கு "அடித்து அடித்து கையெல்லாம் சிவந்து போய் விட்டது. தக்க நேரத்தில்  பானையில் இருக்கும் கரியும் தன் வேலையைக் காட்டத் தொடங்கி விட்டது. 

இதனை விடப் பெரிய பகிடி என்னவென்றால் கடம் பற்றியது. எங்களுக்கு அந்த வயதில் கடம் என்றால் ஒரு மண் பானை எண்டு தான் நினைப்பு அதேமாதிரி ஒரு பனையை வாங்கி எமது வில்லிசைக் குழுவில் இருந்த நண்பனொருவன் கடமாக்கித் தட்டிக் கொண்டிருந்தான். நான் தான் பாடகன். ஆகவே எனக்குத்தான் வில்லு. ஹி...ஹி... பயிற்சியின் போது எம்மால் சோடா மூடி போடு தயாரிக்க பட்ட வில்லை பாவிக்க முடிய வில்லை. எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம். வில்லு இன்றி என் கை விரல்களால் தட்டித் தட்டி கை வலிக்க வலிக்க பாடித் தான் வில்லுப் பாட்டினை அரங்கேற்றினோம். 

எமது நிகழ்வுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கவில்லை. (கடுகின் காரம் தெரியாது போலும். ஹி....ஹி..) நாங்கள் எமது சோடா மூடி வில்லையும் பானைகளையும் கொண்டு மேடை ஏறினோம். இதில கொடுமை என்னென்டா மைக் தந்தார்கள். எமது வில்லு பாட்டு தொடங்கியது இதுதான் சந்தர்பம் எண்டு வில்லை போட்டு அடிச்சு துவைக்க தொடங்கினேன். தற்செயலாக எனக்கு வைக்க பட்டிருந்த மைக்கை அடித்து விட்டேன் அதன் முன்பக்கம் கழண்டுவிட்டது. (அந்த கால கட்டத்தில் மைக் எல்லாம் கிடைக்கிறது பெரிய விஷயம்.) ஆனால் எமது வில்லின் சத்தமும் எமது கதையும் எல்லோரது கவனத்தையும் எம்பக்கம் திருப்பியது. எமது நிகழ்வு நிறைவடைந்ததும் எல்லோரது பாராட்டுகளும் கிடைத்தது. அதைவிட சிறப்பு எமது வில்லுபாட்டு எமது பிரதேச முருகன் ஆலயத்தில் அரங்கேற்றும் வாய்ப்பு கிடைத்தது.
முருகன் கோவிலில் இரவு ஒரு மணிக்கு எமது வில்லு பாட்டு நடந்தது.  அந்த நித்திரை தூக்கத்திலும் இருந்த சந்தோசம் எல்லோர் முன்பும் பாட போகின்றோம் என்ற பெருமிதம் எல்லாம் மறக்கவே முடியாது. இப்போதெல்லாம் கோயிலில் வில்லுப் பாட்டினைக் காண்பது, கேட்பது என்பது அரிதாகி விட்டது. இப்போது குத்து டான்ஸ்சும், பிரேக் டான்ஸும் தான் கோயிலிலும் களை கட்டத் தொடங்கி விட்டது.

அரும்பத விளக்கம்/ சொல் விளக்கம்: 
பகிடி: பகடி/ காமெடி.
எண்டா: என்றால்.

மீண்டும் மற்றுமோர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை நன்றி கூறி விடை பெற்றுக் கொள்வது,
அன்புடன்,
ஆகுலன்.

39 comments:

மைந்தன் சிவா said... Best Blogger Tips

தந்தனத்தோம் என்று சொல்லியே...பாடசாலை காலத்தில் செய்தது...அது ஒரு காலம்..இப்போ எங்கே இதெல்லாம் நடக்குது!

எஸ்.பி.ஜெ.கேதரன் said... Best Blogger Tips

பாடசாலைக்காலத்தைப்பற்றி சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆமா..
நீங்க கலைமள்ல படிச்சவிங்களா?சொல்லவே இல்ல?

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் ஆகுலன்,
எம் பால்ய கால நினைவுகளையும், எங்கள் பள்ளிகளின் கலை விழாக்களில் தனி இடம் பிடித்த வில்லுப் பாட்டினையும் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறீங்க.

நான் பண்டாரவன்னியன் வாழ்க்கை வரலாற்றினை வில்லுப் பாட்டாகச் செய்தனான்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆகுலன் said... Best Blogger Tips

அப்ப எல்லோரும் வில்லுபாட்டு செய்திருக்குரம்...............

மறக்கவே முடியாது...

ஆகுலன் said... Best Blogger Tips

நீங்க கலைமள்ல படிச்சவிங்களா?சொல்லவே இல்ல?//

ஆம் முள்ளியவளை கலைமகள் வித்தியாலதில்...

காட்டான் said... Best Blogger Tips

ஆகுலன்.. உங்கள் பிளாக்கில் எழுதியதை விட ஈழவயலில் நன்றாக எழுதுகிறீர்கள்.. பழசை இன்னும் மறக்காமல் இருக்கிறீங்க.. வாழ்த்துக்கள்..!

துஷ்யந்தன் said... Best Blogger Tips

ஆகுலன் அந்தக்கால நினைவுகளை இன்னும் மறக்க முடியவில்லைப்போல் இருக்கே....??? ஹா ஹா..
இங்கேயும் அதானப்பா.... அவ்வவ்

துஷ்யந்தன் said... Best Blogger Tips

ஆகுலன் வில்லுப்பாட்டு நானும் எங்கள் பள்ளியில் செய்து இருக்கேன்.... எனக்கு மற்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதை விட வில்லுப்பாட்டில் பங்கு பெற விருப்பம் காரணம் நண்பர்களுடன் சேர்ந்து செய்வதால்..... உங்கள் பதிவை படித்ததில் இருந்து எனக்கு அந்த நினைவுகள் எல்லாம் வந்துட்டுது :(

துஷ்யந்தன் said... Best Blogger Tips

(கடுகின் காரம் தெரியாது போலும். ஹி....ஹி..<<<<<<<<<<<<<<<<

இப்போ எங்களுக்கு தெரியுதே இந்த கடுகின் காரம்... :) :) :)

துஷ்யந்தன் said... Best Blogger Tips

எனக்கு வைக்க பட்டிருந்த மைக்கை அடித்து விட்டேன் அதன் முன்பக்கம் கழண்டுவிட்டது. <<<<<<<<<<<<<<<<

ஹா ஹா..... பக்கத்தில் இருப்பவன் முறைச்சு பார்த்து இருப்பானே..... lol

துஷ்யந்தன் said... Best Blogger Tips

கோயிலில் வில்லுப் பாட்டினைக் காண்பது, கேட்பது என்பது அரிதாகி விட்டது. இப்போது குத்து டான்ஸ்சும், பிரேக் டான்ஸும் தான் கோயிலிலும் களை கட்டத் தொடங்கி விட்டது.<<<<<<<<<<<<<<<

இது எவ்வளவு உண்மை.... இது கவலையான விடயம் ஆகுலன்

KANA VARO said... Best Blogger Tips

ஓமோம் நானும் வில்லுப்பாட்டு படிச்சிருக்கன்.

”டாடி மம்மி வீட்டில் இல்லே, தடைபோட யாருமில்லை, விளையாடுவோமா வில்லாளா”
”வாடா மாப்பிள்ளை வாழைப்பழ தோப்பிலை”
“ராமா ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்லைக் கேட்டன்”
“சரி கம பத நிஸ்ஸ, கமோன் கமோன்.. (என்ன கன்றாவியோ)”
“தீம்தனக்க தில்லானா”

வேற ஏதாவது பாட்டு மிஸ்ஸிங்கா…

KANA VARO said... Best Blogger Tips

வில்லுப்பாட்டையும், யாழ்ப்பாணத்து சின்னமணியையும் மறக்க முடியுமோ! அவர் என் நண்பன் ஒருவனின் நெருங்கிய உறவினர்.

ஹேமா said... Best Blogger Tips

எனக்கு வில்லுப்பாட்டு அவ்வளவா ஞாபகமில்ல.ஆனா யூ ட்யூப்ல கேட்டிருக்கிறன்.பதிவு எழுதின ஆகுலனை விட இங்க பின்னூட்டம் போட்டிருக்கிற எல்லாருமே வில்லுப்பாட்டுக் கலைஞர்கள்போல !

**ஒரு பனையை வாங்கி கடம் போலத் தட்டிக் கொண்டிருந்தான்**

சும்மா பானையில கடமோ...சரிதான்.பானை பனையாகி அர்த்தத்தையே மாத்துது.
மாத்திவிடுங்கோ ஆகுலன் !

மதுரன் said... Best Blogger Tips

ஆகுலன்.. பாடசாலை காலத்து வில்லுப்பாட்டு அனுபவம் பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள்.. எனக்கு வில்லுப்பாட்டு பார்க்கிற அனுபவம் நிறையவே இருக்கு... அப்போ டிவி, திரையரங்குக்கு பதிலா வில்லுப்பாட்டுத்தானே இருந்தது

யோகராஜா சந்ரு said... Best Blogger Tips

நானும் சிறு வயது முதல் பல வில்லுப்பாடல்களை செய்தவன். வில்லுப்பாடல்களை எழுதி இருக்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்திலும் எனது சிறுவயதிலே பல வில்லுப்பாடல்களை பார்த்திருக்கின்றேன். ஆனால் இப்போது மிக மிகக் குறைவு. ஒரு சிலர் வில்லுப்பாடல்களை செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான தமிழர் கலைகள் அழிவடைந்து வருவதற்கு தொலைக்காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது எனது தனிப்பட்ட கருத்து.

புலவர் சா இராமாநுசம் said... Best Blogger Tips

நல்ல பதிவு
வில்லுப்பாட்டு பழைய நினைவுகளை கிளரி விட்டது!


புலவர் சா இராமாநுசம்

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

நல்லதொரு பதிவு ஆகுலன். எனக்கும் பழைய பாடசாலை ஞாபகங்கள் வந்து போகிறது. நாங்கள் எல்லாம் பின் வரி குரூப். ஆமா போடுற ஆக்கள். அந்த காலங்கள் இன்னும் கண்களில் நிக்கிறது. வாழ்த்துக்கள்.

Powder Star - Dr. ஐடியாமணி said... Best Blogger Tips

அருமையான தொகுப்புஇ ஆகுலன்! வில்லுப்பாட்டை ரசிக்காதோர் யாருளர்? எனக்கு மிக மிக பிடிக்கும்!

ஒரே ஒரு வில்லுப்பாட்டில் நானும் கலந்துகொண்டேன்! என்னைப் பாட எல்லாம் விடவில்லை! சும்மா பக்கத்தில் இருந்து ஆமா போட்டேன்!

நிகழ்ச்சி முடிந்ததும் பலத்த கரகோஷம்! நிகழ்ச்சி தயாரிப்பாளர் பின்னர் சொன்னார் “ இப்போது புரிகிறதா உன்னை ஏன் பாடவிடவில்லையென்று?”

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

சின்னபிள்ளையில் கேட்டப்பாடல் வில்லு பாட்டு...!!!

விக்கியுலகம் said... Best Blogger Tips

வில்லுப்பாட்டு என்றால் திரு. சுப்பு ஆறுமுகம் குழுவினர் ஞாபகத்துக்கு வருகிரார்கள்..என் பாட்டனாரும் அந்த குழுவில் ஒருவர்...மீண்ட நினைவுகள் நன்றி மாப்ள!

மாலதி said... Best Blogger Tips

மிகசிறந்த பதிவு பசுமையான நினைவலைகள் மிகவும் சிறப்பு பாராட்டுகள் தொடக்க ...

சந்திரகௌரி said... Best Blogger Tips

அனுபவம் புதுமை எப்போது அது பற்றிச் சிந்தித்தாலும் புதிதாகத் தான் இருக்கும். உங்கள் ௬ ஆம் வகுப்பு நினைவுகளை எம்முடன் இணைந்து மீட்டியமைக்கு மிக்க நன்றி

angelin said... Best Blogger Tips

வில்லு பாட்டு என்றாலே கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்கள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறார் .ஊரிலிருக்கும்போது பொங்கல் /சித்திரை /தீபாவளிக்கு தவறாமல் அவர் குழுவின் வில்லுப்பாட்டுதான் டிவியில் ஒளிபரப்பாகும்

விண்ணாணம் விநாசியார்! said... Best Blogger Tips

வணக்கம் ராசா ஆகுலன்,
பயங்கர கண கணப்பாய் வில்லுப் பாட்டுப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்.
மிகவும் நன்றி தம்பி

ஆகுலன் said... Best Blogger Tips

காட்டான் said...
ஆகுலன்.. உங்கள் பிளாக்கில் எழுதியதை விட ஈழவயலில் நன்றாக எழுதுகிறீர்கள்.. பழசை இன்னும் மறக்காமல் இருக்கிறீங்க.. வாழ்த்துக்கள்..!///

மாமா வாழ்கையை ரசித்த நாட்களை எப்படி மறக்க முடியும்..

ஆகுலன் said... Best Blogger Tips

துஷ்யந்தன் said...
(கடுகின் காரம் தெரியாது போலும். ஹி....ஹி..<<<<<<<<<<<<<<<<

இப்போ எங்களுக்கு தெரியுதே இந்த கடுகின் காரம்... :) :) :)///

அண்ணே என்னை விட சிறப்பாக எழுத கூடிய பல இளையவர்களுக்கு தகுந்த இடம் கிடைபதில்லை..அதுதான் ஒரு வருத்தம்..(அதாவது வசதிகள்..)

ஆகுலன் said... Best Blogger Tips

KANA VARO said...
ஓமோம் நானும் வில்லுப்பாட்டு படிச்சிருக்கன்.

”டாடி மம்மி வீட்டில் இல்லே, தடைபோட யாருமில்லை, விளையாடுவோமா வில்லாளா”
”வாடா மாப்பிள்ளை வாழைப்பழ தோப்பிலை”
“ராமா ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்லைக் கேட்டன்”
“சரி கம பத நிஸ்ஸ, கமோன் கமோன்.. (என்ன கன்றாவியோ)”
“தீம்தனக்க தில்லானா”

வேற ஏதாவது பாட்டு மிஸ்ஸிங்கா…//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
அண்ணன் வில்லு பாட்டு பாடி களைத்து விட்டார் ஒரு டீ சொல்லுங்க..

ஆகுலன் said... Best Blogger Tips

ஹேமா said...
எனக்கு வில்லுப்பாட்டு அவ்வளவா ஞாபகமில்ல.ஆனா யூ ட்யூப்ல கேட்டிருக்கிறன்.பதிவு எழுதின ஆகுலனை விட இங்க பின்னூட்டம் போட்டிருக்கிற எல்லாருமே வில்லுப்பாட்டுக் கலைஞர்கள்போல !

**ஒரு பனையை வாங்கி கடம் போலத் தட்டிக் கொண்டிருந்தான்**

சும்மா பானையில கடமோ...சரிதான்.பானை பனையாகி அர்த்தத்தையே மாத்துது.
மாத்திவிடுங்கோ ஆகுலன் !//

அக்கா சரி செய்து விடுகிறேன்..
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஆகுலன் said... Best Blogger Tips

யோகராஜா சந்ரு said...
இவ்வாறான தமிழர் கலைகள் அழிவடைந்து வருவதற்கு தொலைக்காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது எனது தனிப்பட்ட கருத்து.//

தாங்கள் சொல்வது சரிதான்...இந்த தடைகளை தாண்டி நாம் ஏதாவது செய்ய வேண்டும்..

ஆகுலன் said... Best Blogger Tips

புலவர் சா இராமாநுசம் said...
நல்ல பதிவு
வில்லுப்பாட்டு பழைய நினைவுகளை கிளரி விட்டது!


புலவர் சா இராமாநுசம்//

ஐயா வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

ஆகுலன் said... Best Blogger Tips

பி.அமல்ராஜ் said...
நல்லதொரு பதிவு ஆகுலன். எனக்கும் பழைய பாடசாலை ஞாபகங்கள் வந்து போகிறது. நாங்கள் எல்லாம் பின் வரி குரூப். ஆமா போடுற ஆக்கள். அந்த காலங்கள் இன்னும் கண்களில் நிக்கிறது. வாழ்த்துக்கள்.///

அண்ணே ஆமா போடுவதற்கு ஆள் இல்லாவிடில் வில்லுபாட்டே கிடையாது..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஆகுலன் said... Best Blogger Tips

MANO நாஞ்சில் மனோ said...
சின்னபிள்ளையில் கேட்டப்பாடல் வில்லு பாட்டு...!!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஆகுலன் said... Best Blogger Tips

விக்கியுலகம் said...
வில்லுப்பாட்டு என்றால் திரு. சுப்பு ஆறுமுகம் குழுவினர் ஞாபகத்துக்கு வருகிரார்கள்..என் பாட்டனாரும் அந்த குழுவில் ஒருவர்...மீண்ட நினைவுகள் நன்றி மாப்ள!///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஆகுலன் said... Best Blogger Tips

மாலதி said...
மிகசிறந்த பதிவு பசுமையான நினைவலைகள் மிகவும் சிறப்பு பாராட்டுகள் தொடக்க ...//

நன்றி அக்கா ..தொடர்வோம் நீங்களும் எங்களை தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையில்...

அம்பலத்தார் said... Best Blogger Tips

//அந்த நித்திரை தூக்கத்திலும் இருந்த சந்தோசம் எல்லோர் முன்பும் பாட போகின்றோம் என்ற பெருமிதம் எல்லாம் மறக்கவே முடியாது. இப்போதெல்லாம் கோயிலில் வில்லுப் பாட்டினைக் காண்பது, கேட்பது என்பது அரிதாகி விட்டது.//
இப்படி எத்தனை நல்லவிடயங்களை நாம் தொலைத்து நிற்கிறோம்.

ஆகுலன் said... Best Blogger Tips

அம்பலத்தார் said...
//அந்த நித்திரை தூக்கத்திலும் இருந்த சந்தோசம் எல்லோர் முன்பும் பாட போகின்றோம் என்ற பெருமிதம் எல்லாம் மறக்கவே முடியாது. இப்போதெல்லாம் கோயிலில் வில்லுப் பாட்டினைக் காண்பது, கேட்பது என்பது அரிதாகி விட்டது.//
இப்படி எத்தனை நல்லவிடயங்களை நாம் தொலைத்து நிற்கிறோம்.//

ஐயா இனி இவற்றை எம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது..

சாய் பிரசாத் said... Best Blogger Tips

நானும் வில்லுப்பாட்டில் பாடசாலை காலத்தில் பங்கேற்றிருக்கிறேன்.. நினைவுகளை மீட்டுவிட்டது பதிவு.

வில்லுப்பாட்டு என்றதும் சின்னமணியர் தான் நினைவில் வருகிறார்.

மகேந்திரன் said... Best Blogger Tips

/////இப்போதெல்லாம் கோயிலில் வில்லுப் பாட்டினைக் காண்பது, கேட்பது என்பது அரிதாகி விட்டது. இப்போது குத்து டான்ஸ்சும், பிரேக் டான்ஸும் தான் கோயிலிலும் களை கட்டத் தொடங்கி விட்டது./////

இன்று உள்ள நிதர்சனமான நிலை இதுதான்.
அவசர உலகத்தில் யாரும் இரண்டு மூன்று மணி மேரங்கள்
உட்கார்ந்து கலைகளை ரசிக்க அவர்களுக்கு நேரமில்லை..
வீட்டில் உட்கார்ந்தோமா.. தொலைக்காட்சியைப் பாத்தோமா.
இன்றைய பொழுது கழிந்ததா,,
என்று தான் போகிறது.
நம் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் காக்கும்
இக்கலைகள் அழிந்துவிடக் கூடாது
கண்போல காக்க வேண்டும்/.

அருமையான பதிவு நண்பரே.
என் மனத்தினின்று பலமான கைத்தட்டல்கள்.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!