Sunday 25 December 2011

தமிழினம் உண்மையிலேயே உயர்ந்த இனமா? - ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

ஈழவயலின் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

மது தமிழினம் உலகத்தில் தலை சிறந்த இனமா? என்று நான் அடிக்கடி என்னுள் கேள்வி கேட்பதுண்டு! சில சமயங்களில் நாம் உயர்ந்த இனமாகவும், சில சமயங்களில் ஏதோ சில காரணங்களால் நாம் பின் நிற்பதாகவும் தோன்றுகிறது! இதுகுறித்து உங்களுடன் கலந்துரையாடினால் தான் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்! 
முதலில் எம்மை இந்த உலகத்தில் சிறந்தவர்களாக படம்பிடித்துக் காட்டும் இரண்டு காரணிகளைச் சொல்லுகின்றேன்! முதலாவது எமது மொழி! உலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலை சிறந்த மொழி தமிழ் என்று நாம் சொல்லுகிறோம்! எழுதுகிறோம்! பேசுகிறோம்! ஆனால் இதனை அனுபவ ரீதியாக எப்போதேனும் உணர்ந்திருக்கிறோமோ?இல்லைத் தானே! நிச்சயமாக உலகில் தமிழ் சிறந்த மொழிதானா? அல்லது, தமிழராகப் பிறந்ததனால் இப்படிச் சொல்லிக்கொண்டு இருக்கிறோமா? 

இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டால் என்ன சொல்வீர்கள்? “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே” ஆகவே எங்கள் மொழி எமக்குப் பெரிசுதான்! என்று கொஞ்சம் சோகம் கலந்த பதிலா சொல்லப் போகிறீர்கள்? அதற்கு அவசியமே இல்லை! அப்படி ஒரு கழிவிரக்கப் பதில் எமக்குத் தேவையுமில்லை! நிச்சயமாகவே தமிழ் உலகில் தலை சிறந்த மொழிதான்! தமிழின் இனிமையும், பழைமையும் வேறெந்த மொழியிலும் கிடையாது! 

எம்மில் பலருக்கு ஆங்கிலம் தான் சிறந்த மொழி என்ற எண்ணம் இருக்கிறது! இன்னும் சிலருக்கு எமது தமிழை வளர்க்க வேண்டுமானால் ஆங்கிலத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது! இவை இரண்டுமே தப்பு! தன் தாய் மொழி அல்லாத இன்னொரு மொழியைப் பயின்றவனுக்கே நிச்சயமாக தனது தாய்மொழியின் அருமை புரியும்! இப்பதிவைப் படிக்கும் உங்கள் அனைவருக்குமே ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருக்கும் என்பது எனது நம்பிக்கை! சரி, தமிழ் சிறந்தது சிறந்தது என்று சும்மா சும்மா சொல்லிக்கொண்டிருந்தால் சரியா? உண்மையாகவே தமிழ் சிறந்ததுதானா? 

ஒரு உதாரணம் பார்ப்போமா? ஆங்கிலத்தில் Come என்ற சொல்லுக்கு ஒரே ஒரு அர்த்தம் மட்டும்தான் உள்ளது! அது “ வா” என்பதாகும்! ஆறுவயது சிறுவனுக்கும் வா தான்! அறுபது வயது தாத்தாவுக்கும் வா தான்! ஆனால் தமிழர்களாகிய நாம் “ வயதுக்கு மரியாதை செய்யும் பண்பு” கொண்டவர்கள் என்பதால், ஒரு பெரியவரைப் பார்த்து “ வா” என்று அழைப்பதில்லை! “ வாருங்கள்” என்றே அழைப்போம்! இது ஒவ்வொரு பிரதேச வழக்கிலும் கொஞ்சம் கொஞ்சம் வேறுபடும்! சரி, Come இன் இறந்த காலமாகிய Came என்பதற்கு என்ன பொருள் சொல்லுங்கள் பார்க்கலாம்! வந்தான் என்று சொல்வீர்களா? வந்தாள் என்று சொல்வீர்களா? வந்தார் என்று சொல்வீர்களா? வந்தது என்று சொல்வீர்களா? ஹா ஹா ஹா பாருங்கள், ஆண்பால், பெண்பால், பலர் பால், பலவின் பால், ஒன்றன் பால் அனைத்துக்குமே ஒரே ஒரு சொல்லைத் தான் வைத்திருக்கிறார்கள்! எழுவாயைக் கொண்டு மட்டுமே நாம் Came யாரைக் குறிக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்! 
உதாரணம் - She came - அவள் வந்தாள்! He came - அவன் வந்தான்! ஆகவே Came என்றால் என்னவென்று யாராவது கேட்டால் சட்டென்று உங்களால் பதில் சொல்லிவிட முடியாது! இது ஆங்கில மொழிக்கு பெருமை தரும் விஷயம் கிடையாது!ஆனால் தமிழில் ஒரே ஒரு ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு பல விஷயங்களை எம்மால் கணிக்க முடியும்! 

உதாரணம் - வந்தாள் என்ற சொல்லைப் பாருங்கள்! 
இதில் பால் வேறு பாடு தெரியும் -  வந்தவள் பெண்! 
இதில் எண் வேறுபாடு தெரியும்! வந்தவள் - ஒருத்தி
காலம் தெரியும்! இது இறந்தகாலம்! - அவள் வந்துவிட்டாள்!

என்ன ஆச்சரியமா இருக்கா?எப்படி ஒரே ஒரு சொல்லிலேயே இவ்வளவற்றையும் கண்டுபிடிக்க முடிகிறது? ஹா ஹா இதுதான் தமிழ்! இதுதான் தமிழின் சிறப்பு! இப்போது நான் சொன்னது ஏதோ புது விஷம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்!ஆறாம் வகுப்பிலேயே சொல்லித் தருகிறார்கள்! நாம் தான் கவனிப்பதில்லை! 

இந்த ஒரு உதாரணம் மட்டுமல்ல! தமிழ் உலகில் உள்ள ஏனைய மொழிகளைவிட உயர்ந்தது என்பதற்கு பல நூறு உதாரணங்கள் சொல்ல முடியும்! ஆகவே, தமிழ் சிறந்தது, தமிழ் உயர்ந்தது என்று யாருமே வெறும் வார்த்தைக்குச் சொல்ல வேண்டாம்! அல்லது காக்கைக்கும் தன்குஞ்சு என்ற ரீதியில் ஒருவித கழிவிரக்கத் தொனியில் பேச வேண்டாம்! அதற்கெல்லாம் அவசியமே இல்லை! நிச்சயமாகத் தமிழ் உயர்ந்ததுதான்! தமிழோடு ஆங்கிலத்தை ஒப்பிடுவது எவ்வகையிலும் பொருத்தமற்றது! 

தமிழைக் கற்கின்ற பிற மொழி அறிஞர்கள் மூக்கில் விரலை வைக்கிறார்கள்! தமது மொழியைவிட தமிழ் உயர்ந்திருக்கிறது என்று அவர்களுக்கு நிச்சயமாக உள்ளுணர்வு சொல்லிவிடும்! இன்று பல மொழி அறிஞர்கள் தமிழை ஆய்வு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்! அவர்களால் இன்னமும் தமிழைக் கற்று முடிக்க முடியவில்லை! அவ்வளவு ஏன்? தமிழர்களாகப் பிறந்த எம்மால் கூட தமிழை முழுமையாகக் கற்றுமுடிக்க ஒருபோதுமே முடியாது! தமிழ் அவ்வளவு பரந்தது! 

சரி,இப்படியான அருமையான மொழி எமக்குத் தாய்மொழியாக வாய்த்திருப்பது எமக்கு பெருமை என்றாலும், அந்தப் பெருமையினை நாம் உணர்கிறோமா? என்பதை எமக்குள் நாமே கேட்டுக்கொள்ளலாம்! இன்னொரு விஷயம் தெரியுமா? தமிழுக்கு - ஆங்கிலம் அருகில் நெருங்கவே முடியாது! ஆனால் தமிழோடு முட்டி மோதுவதற்கு என்றே ஒரு மொழி இருக்கிறது! அந்த மொழி தமிழுக்குச் சவால் விட எத்தனிக்கிறது! முயல்கிறது! ஆனால் முடியவில்லை! அது என்ன மொழி தெரியுமா?அதுதான் பிரெஞ்சு! பிரெஞ்சைப் படிக்கப் படிக்க இனிமை! இனிமை! இனிமை! அவ்வளவு அழகான மொழி! ஆனால் தமிழை நெருங்குமா என்றால்.....? இல்லவே இல்லை! இது ஃபிரெஞ்சுக்காரர்களுக்கும் நன்கு தெரியும்! 

சரி, தமிழினம் உயர்ந்த இனமாக மதிக்கப்படுவதற்கு இரண்டு காரணிகள் இருப்பதாகச் சொன்னேன் அல்லவா? அதில் ஒன்றுதான் எமது மொழி! தமிழ் மொழியின் பெருமைகள் பற்றி அடிக்கடி தமிழர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருப்பதும் ஒரு வகை சங்கடம் தான்! சரி, உயர்ந்ததுதான்! ஒத்துக்கொள்கிறோம்! அப்படியானால் அந்த இன்னொன்று எது? உலகம் தமிழர்களைப் பார்த்து வியக்கும் அந்த இன்னொரு காரணி எது? தமிழனின் வீரமா? - மன்னிக்கவும்! தமிழர்களின் வீரம் இன்னமும் சரியான முறையில் உலகின் முன்னால் நிரூபிக்கப்படவில்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்! இதில் மாற்றுக்கருத்து இருப்பவர்கள், தாராளமாக ஒரு பதிவிலே இதனை விளக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்! 

என்னது வீரமும் இல்லையா? அப்படியானால் தமிழனைப் பார்த்து இந்த உலகமே புருவத்தை உயர்த்தும் அந்த இன்னொன்று எது? எது? எது? 

காத்திருங்கள்! அடுத்த பதிவில் பேசுவோம்! யாருக்காவது ஏதாவது ஊகம் இருந்தால் பின்னூட்டத்தில் வந்து சொல்லுங்கள்! காத்திருக்கிறேன்!
.

28 comments:

thamizhiniyan said... Best Blogger Tips

அடுத்த பதிவிற்காக காத்திரிகின்றோம்.....மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Best Blogger Tips

அருமை.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.

Anonymous said... Best Blogger Tips

Please do not blow your own trumpet.
I am sick and tired of Tamil people saying that Tamil is the best language in the whole world.You guys are bloody day dreamers.Can you answer my simple question, Why Tamil people are being chased away within India and in SriLamka ?????????????? I know you will delete my queation,if you have guts try to answer my question.

Jana said... Best Blogger Tips

தமிழ் மொழி இனிதானது என்று தமிழன் மட்டும் சொல்லிக்கொண்டிருக்கவில்லை, இன்று தமிழக பல்கலைக்கழகங்களில் சென்று பாருங்கள் எத்தனை அந்நிய மொழிக்காரர்கள் தமிழ் படிக்கின்றார்கள் என்று. தமிழ் மொழி இனிதானது என்பதுடன், உணர்வானது என்று வீரமாமனிவர் (ஒரு இத்தாலியர்) என்றோ நிரூபித்தும் காட்டியுள்ளார்.
'யாமறிந்த மொழிகளிலே இனிதானது ... என்ற விழிப்புடன் பாரதி சொன்னபோது பாராதிக்கு 14 மொழிகளிலே மிகச்சிறந்த பரீட்சியம் உண்டு என்பது வெறும் கதையல்ல.
இங்கே உண்மையானவர்கள் யாரும் இந்திய தமிழ், இலங்கைத்தமிழ் என்ற பாகுபாடு காட்டுவதில்லை, உணர்வாலும், உயிராலும் நாம் ஒருவரே என காட்டிய சம்பவங்கள் பல உண்டு.
அதை பிரிக்க எத்தனிப்பதும், பிரித்ததும் ஆரியம், இன்று அதன் வழி நிற்கும் வட இந்தியமேலாதிக்க சக்திகளின் வெறிக்கண்களுமே. தசைகளும், ரெத்தமும் கொதிப்பதும், கொதித்ததும், தேச எல்லைகள், பிற நாடுகள் என்ற கோடுகளை தகர்த்தே என்பதை கவனிக்க... இதற்கு முதல் கௌ;வி தொடுத்தவருக்கு இந்த பதில் போதுமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

Jana said... Best Blogger Tips

தமிழில் கள் என்பது பெற்ற பெருவாழ்வு என்பது பற்றி (கள் விகுதி) பற்றி படித்திருக்கின்றோம் அல்லவா நிரூபன். தமிழில் ஒவ்வொன்றும் சுவையானது, நான் எப்போதும் சொல்வதுபோல தமிழ் பகத்தி மொழி என்று எவன் சொன்னான்? தமிழ் உணர்வுகளின் மொழி.
எனது விருப்பங்கள் எல்லாம் கெட்டதிலும் ஒரு நன்மைபோல இன்று தேச எல்லைகளை கடந்து தமிழன் பல பல தேசங்களையும், மொழிகளையும் சென்றடைந்துள்ளான், அதில் இன்றைய இளைஞர் சந்ததியினர் அந்த மொழிகளில் பேச, எழுத என அத்தனையும் பெற்றவர்களாக தமிழக்கு ஒரு வரப்பிரசாதங்களாக உள்ளனர். இவர்களே நமக்கு கிடைத்த முத்துக்கள், தமிழில் உள்ள அரிய இலக்கியங்கள், தமிழ் பற்றிய சுவைகள் என எல்லாம் அந்த அந்த மொழிகளுக்கும், அதேவேளை எமது கலாசாரத்திற்கு ஏற்றவகையில் அந்ததந்த மொழிகளில் வெளியாகும், இலக்கியங்கள், விஞ்ஞான அறிவியல் தகவல்கள் என பலவற்றை தமிழுக்கும் கொண்டுவந்தால் எம் தமிழ் உலக ஓட்டத்தில் சுமார் 100 மைல்களை கடக்கவும், எமது இலக்கியங்களில் புதுப்புரட்சி புகவும் ஏதுவாக இருக்கும்.

ad said... Best Blogger Tips

தமிழர்களின் பண்டைய அறிவியலும், பண்பாடும்,கட்டடக்கலையுமாக சேர்ந்த அவர்களின் நாகரீகமே மற்றவர்களை வியப்பூட்டிக்கொண்டிருக்கிறது.
இது என் ஊகம்.

K said... Best Blogger Tips

இலங்கை, இந்தியாவில் இருந்து தமிழர்கள் விரட்டப்படுவதற்கும், தமிழ் மொழியின் சிறப்புக்கும் என்னையா சம்மந்தம்?

K said... Best Blogger Tips

தமிழைவிட உலகில் உயர்ந்த மொழி எது என்று விகாஸ் அவர்களால் குறிப்பிட முடியுமா? அறிந்துகொள்ள ஆசை :)

Mathuran said... Best Blogger Tips

வணக்கம் பூதம் ஐயா!

தமிழின் பெருமைகளை அழகாகவே எடுத்துக்கூறியுள்ளீர்கள். வயதுக்கு மரியாதை செய்யும் பண்பை மொழிகளிலேயே விதைத்துவிட்டார்கள் எம் மூதாதையர்கள். நாம்தான் ஏனோ எம் மொழியின் ஆழம்/அழகு அறியாமல் வெறும் கவர்ச்சி மொழிகளை தேடி அலைந்துகொண்டிருக்கிறோம்.

Mathuran said... Best Blogger Tips

//தமிழர்களின் வீரம் இன்னமும் சரியான முறையில் உலகின் முன்னால் நிரூபிக்கப்படவில்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்!//

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சரியான முறையில் நிரூபிக்கப்பட்டதால்தான் உடனடியாக ஒடுக்கிவிட பக்கத்துவீட்டாரும்,பலரும் ஒன்று கூடினார்கள்.

சுதா SJ said... Best Blogger Tips

யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழிபோல் இனிமை காணோம் என்று பாரதி சும்மாவா சொன்னார்!!! என் மொழி தமிழ் மொழி என்று சொல்வதில் எப்பவும் எனக்கு பெருமை உண்டு.தமிழில் எத்தனை எத்தனை வார்த்தைகள்.. அதைக்கொண்ட இலக்கியங்கள். நாம் தமிழர் என் மொழி தமிழ் என்பதில் எப்பவும் நாம் கர்வத்துடனேயே இருக்கலாம்.

சுதா SJ said... Best Blogger Tips

'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா... அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா"

இந்த பாடலில் குறிப்பிடுவதை போல இந்த உலகத்தில் பேசும் மொழிகளில் மன உணர்ச்சியை வெளிப்படுத்தும் சொற்கள் இருக்கும் ஒரே ஒரு மொழி தமிழ் மொழி தான்.

சுதா SJ said... Best Blogger Tips

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல்சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும். பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும். ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டு.

இது எனக்கு மிகவு பிடித்த தமிழ் பாடல்...என் என்ன ஓட்டமும் இதுவே....

குட்டிப்பையன் said... Best Blogger Tips

அருமையான பதிவு தமிழ் என் தாய் மொழி என்று சொல்வதில் பெருமை அடைகின்றேன்

சுதா SJ said... Best Blogger Tips

இன்னொரு விஷயம் தெரியுமா? தமிழுக்கு - ஆங்கிலம் அருகில் நெருங்கவே முடியாது! ஆனால் தமிழோடு முட்டி மோதுவதற்கு என்றே ஒரு மொழி இருக்கிறது! அந்த மொழி தமிழுக்குச் சவால் விட எத்தனிக்கிறது! முயல்கிறது! ஆனால் முடியவில்லை! அது என்ன மொழி தெரியுமா?அதுதான் பிரெஞ்சு! பிரெஞ்சைப் படிக்கப் படிக்க இனிமை! இனிமை! இனிமை! அவ்வளவு அழகான மொழி! ஆனால் தமிழை நெருங்குமா என்றால்.....? இல்லவே இல்லை! இது ஃபிரெஞ்சுக்காரர்களுக்கும் நன்கு தெரியும்!<<<<<<<<<<<<<<<

அட... என் நினைப்பையும் சொல்லிவிட்டீங்க.... பாஸ். தமிழுக்கு அடுத்து எனக்கு ரெம்ப புடிச்ச மொழி பிரஞ்சு. உலகின் காதல் மொழி என்று சொல்வார்கள். தமிழ் படிக்கும் போது கிடைக்கும் சுவையில் கொஞ்சமும் குறைவில்லாமல் இதிலும் சுவை அதிகமே... ஆனாலும் என் தமிழ் மொழிக்கு நிகர் இல்லை என்பதில் பெருமை எனக்கு.

Chandru said... Best Blogger Tips

தமிழின் கவிதையும் அதை இயற்றுவதற்கு இயற்றிய விதிகளாகிய யாப்பபிலக்கணம் தான். கணினியின் நுட்பம் கொண்டது. தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP ) பற்றி அறிய.
http://chandroosblog.blogspot.com/2010/04/tcp-ip.html

காட்டான் said... Best Blogger Tips

அவள் வந்தாள் நான் யோசித்ததே இல்லை...!!

mundagakkannan said... Best Blogger Tips

thamizhukku vanakkam padhivu arumai

Chandru said... Best Blogger Tips

@vikash //Why Tamil people are being chased away within India and in SriLamka ??????????????// Because people are afraid of our supremacy. You please know tamil before you make comments.

அம்பலத்தார் said... Best Blogger Tips

தமிழின் சிறப்பைச் சுவைபட சொல்லீருக்கிறீர்கள்.எமது மொழியை எமது கலாச்சாரத்தை. வாழ்வியலை நாம் தொலைத்துவருவதற்கு முக்கிய காரணம் எம்மிடம் காணப்படும் தாழ்வுமனப்பான்மை. எம்மைவிட ஆங்கிலேயரும் ஏனைய மேலைத்தேசத்தவரும் மேன்மையானவர்கள் என எம்மில் பரம்பரை பரம்பரையாக இருந்துவரும் அடிமைத்தனமும் தழ்வுமனப்பான்மையையும் போகினால் எமது பெருமை உலகுக்கே தெரியவரும்.

அம்பலத்தார் said... Best Blogger Tips

தமிழிற்கு அணிகள், சந்தங்கள் எவ்வளவு இனிமை சேர்க்கின்றன.

அம்பலத்தார் said... Best Blogger Tips

மேலைத்தேசத்தவர் கலவியையும் காமத்தையும் தீண்டத்தகாததாகப் பார்த்த ஆதாம் ஏவாள் காலத்திற்கு முன்பே நாம் காதலையும் காமத்தையும் கலவியையும் சிலைகளாகவும் ஒவியங்களாகவும் கவிதைகளாகவும் அழகுபடுத்தி பார்த்ததைத்தானே அடுத்ததாகச் சொல்லவருகிறீர்கள் அதைபற்றிச் சொல்ல ஒன்றல்ல இரண்டல்ல எத்தனை சிறப்புக்கள் உள்ளன. உங்கள் அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

பதிவு அருமை பூதம் ஐயா. பிற மொழி பேசுபவர்களுடன் வேலைபார்க்கும் ஒருவன் என்கின்ற வகையில் தமிழ் மொழியின் அருமை மிகவும் நன்றாகவே தெரியும்.

மேலே கேள்வி கேட்கும் நண்பரின் பிரச்சனை தமிழ் மொழியின் மேலா அல்லது தமிழர்களின் மேலா என்பதை யாராச்சும் முதல் கண்டுபிடிங்கையா...

thiyagarajan.s said... Best Blogger Tips

முதன் முறையாகப் படிக்கிறேன்..ஒவ்வொரு பதிவும் நன்றாக இருக்கிறது.கவெற பிள்ளையார் கோயிலும் காதல் நினைவுகளும்,பணங்காய் பணியாரம்,மார்கழியின் மகிழ்ச்சி,கோயில் திருவிழாவும் சைட் அடிக்கப்படும் பெண்களும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நினைவுகள்,கனவுகள் எங்களை எங்கோ கொண்டு செல்கின்றன...வாழ்த்துக்கள்

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் கேணியூர் வீறுடை வேந்தே,
அருமையான பதிவு என்று சொல்வதிலும் பார்க்க எம் மனங்களில் உள்ள சிந்தனைகளைத் தட்டியெழுப்பத் தூண்டு கோலாக அமைந்த பதிவு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்!

எமக்குள் பொதிந்திருக்கும் விடயங்களை நாம் இலகுவில் இனங் கண்டு கொள்வதில்லை, பிறர் அது பற்றிச் சொல்கின்ற போது தான் எமக்கு அவ் விடயங்கள் பற்றித் தெரிய வரும். அதே போலத் தான் எம் மொழி பற்றிய அருமை பெருமைகள் எம்மால் இலகுவில் இனங்காணப்படுவதில்லை! தமிழ் பற்றி பிற மொழி வல்லுனர்கள் கூறுகையில் தான் எம் மொழி தொடர்பான புரிதல்களும், சிறப்புக்களும் எம் மனங்களுக்குள் ஆராய்ச்சிகளைத் தோற்றுவிக்கின்றது.

அடுத்த பாகத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

drogba said... Best Blogger Tips

hi
i dont kno weather i'm right or wrong and also to type in english. bcoz i dont kno hw to type in tamil. i think everyone like if something is short and sweet... tamil is the language which has so many words for 'came'. but english has only one word. if someone need some information they can add with it (if only necessary). in another word it hasnt got unnecessary information. thats y i can able to manage with 26 letters.... tamil has 247 and we dont use many of them. is there any latest technology in tamil??? it could be a best language in ancient time.. but i would prefer english.. it is my opinian..

ஆதி said... Best Blogger Tips

நன்றி! வாழ்த்துக்கள், --- ஆதி செல்வம்

தமிழார்வன் said... Best Blogger Tips

தமிழன் என்று இன்னொரு முறை மார்தட்டிக் கொள்ளும் படியான கட்டுரை...

தமிழார்வன்.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!