Wednesday, 18 January 2012

ஈழத்தின் மிக அ(பெ)ரிய வளம் - இரணைமடுக் குளம்!

ஈழ வயலினூடே இப் பதிவினைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்;
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளம் இரணைமடுக் குளம் பல வரலாற்று சிறப்பு மிக்க இந்தக் குளம் ஈழத்தின் புகழ் பூத்த குளங்களில் ஒன்று.
ஊரில் இருக்கும் போது இரணைமடுக் குளம் வான் பாயுது என்றால் ஏதோ திருவிழாக்களுக்கு போவது போல போய் பார்ப்போம். அவ்வளவு அழகாக இருக்கும். இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டால். வன்னியில் யுத்தம் ஏற்பட்ட காலத்திலும் சரி தற்போது யுத்தம் முற்றாக ஓய்ந்து அமைதி திரும்பியுள்ள போதும் சரி கிளிசொச்சிக்கு வருகின்றவர்கள் ஒரு முறை சென்று பார்க்கும் இடம் இரணைமடுக் குளம்.
ஈழத்தில் மிகப்பிரசித்தி பெற்ற இக் குளம் பற்றிய சில குறிப்புக்கள்:

நீர்த்தேக்கத்தின் பெயர் - இரணைமடு 
ஆள்கூறு - A/19 (8.35 x 6.57)
நீர்ப்பாசனப் பிரதிப்பணிப்பாளர் பிராந்தியம்:கிளிநொச்சி மாவட்டம் - கிளிநொச்சி நதிப்படுக்கை: கனகராயன் ஆறு 
மொத்த நீர்க்கொள்ளளவு: 106,500 ஏக்கர் அடி 
நீரேந்து பரப்பு : 906 சதுர கிலோமீற்றர் 
விவசாயப் பரப்பளவு - 8354 ஹெக்ரேயர் 
நீரேந்து சாய்வு:- 1 வீதத்திலும் குறைவு 
நீர் கொண்டுவரும் ஆற்றின் நீளம் - 58 கிலோமீற்றர் 
பிரதேசத்தின் தன்மை: வறண்டது, சிறு பகுதி, மத்திமம். 

நீர்த்தேக்கம்: பூரண நீர் விநியோக மட்டம் - 30.3 மீற்றர் (கடல் மட்டத்திலிருந்து 101 அடி) 
அதியுயர் வெள்ள நீர்மட்டம்: 32.57 மீற்றர் (108.5 அடி)
பூரண நீர் விநியோக மட்டத்தின் பரப்பளவு:27,680 ஹெக்ரேயர் உபயோகிக்கப்படாத நீர்க்கொள்ளளவு - இல்லை 
அணைக்கட்டு மேல் மட்டம் - (கடல் மட்டத்திலிருந்து 33.6 மீற்றர் (112 அடி) மேல் மட்ட/ மேற் பகுதி அகலம் - 4.2 மீற்றர் (14 அடி) 
அதியுயரம் - 13.5 மீற்றர் (45 அடி)  
நீளம் - 2955 மீற்றர் (9850 அடி) 
உட் பக்கச்சாய்வு - 1.2 மீற்றர் 
வெளிப் பக்கச் சாய்வு - 1.2 மீற்றர் 
வான்: இடது கரை தெளிவான மேலான Radial Gate 30.3m  கடல் மட்டத்திலிருந்து 101 அடி)
வலது கரை உடைப்புப் பகுதி: (இயற்கை) -கடல் மட்டத்திலிருந்து 32.1 m (107 அடி) 
துரிசு: இடது கரை: கோபுரத் துரிசு - கடல் மட்டத்திலிருந்து 20.1 m (67 அடி) வலது கரை கோபுரத்துரிசு : கடல் மட்டத்திலிருந்து 21m 

பிரதான வாய்க்காலின் நீளம் - 30,480m 
கிளை வாய்க்காலின் நீளம் - 13,860m 
பிரிவு வாய்க்காலின் நீளம் - 8,370m 
வயல் வாய்க்காலின் நீளம் - 156,540 m 

 பொது இறுதியாக புனரமைக்கப்பட்ட ஆண்டு - 1977 
விவசாயப் பரப்பளவு (பிரத்தியேகம்) - 8352.8 ஹெக்ரேயர் 
விவசாயப் பரப்பளவு (மதிப்பீடு) - 9,400 ஹெக்ரேயர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரிய சொத்து இரணைமடுக் குளம் என்றால் அது மிகையாகாது. தற்போது நாட்டில் யுத்தம் ஓய்ந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் ஒரு இடமாக இரணைமடுக்குளம் மாறியுள்ளது.வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருகை தரும் பலர் இரணைமடுக் குளத்தை ஒரு முறை பார்வையிட்டே செல்கின்றனர்.இரணைமடுக் குளத்த்திற்கு அண்மையில் புகழ பெற்ற கனகாம்பிகைக் குளம் அம்பாள் ஆலயம் உள்ளதும் குறிப்பிடதக்கது. 

இரனைமடுக் குளத்தின் அழகிய புகைப்படங்கள் 









இரனைமடுக் குளத்துக்கு அருகில் உள்ள அருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங் கோயில்




கிளிநொச்சிக்கு வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக இரணைமடுக் குளத்தை பார்க்கத் தவறாதீர்கள். கிளிநொச்சி என்றதும் ஞாபகத்த்திற்கு வரும் விடயங்களில் புகழ் பெற்ற இரனைமடுக் குளமும் ஒன்று.


இரணைமடுக் குளம் பற்றிய இன்னும் சில சுவையான தகவல்களை மற்றுமோர் பதிவில் பார்ப்போமா? 
படங்கள்-ஈழவயலுக்காக கிளிநொச்சியிலிருந்து குட்டிப்பையன்

மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக உங்களைச் சந்திக்கும் வரை; உங்களிடம் இருந்து விடை பெறுவது 
என்றும்
அன்புடன்;
உங்கள்
குட்டிப்பையன்

11 comments:

ஆகுலன் said... Best Blogger Tips

ஓவொருமுறையும் இதன் அருகால் சென்று வந்தது ஜாபகம் வருகுது....

அணை கட்டின் மேல் பயணிப்பது ஒரு சந்தோசம்.....(மோட்டார்சைகிள்)

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் குட்டிப் பையா,
நல்லதோர் வரலாற்றுப் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.
இரணைமடுக் குளத்தின் சிறப்புக்கள், நீர்ப்பாசனத்தில் அதன் பங்களிப்புக்கள் பற்றிய அனுபவப் பதிவுகள் சிலவற்றை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

மிக்க நன்றி.

மதுரன் said... Best Blogger Tips

வணக்கம் குட்டிப்பையன்
இரணைமடுக்குளத்தின் அத்தனை விபரங்களையும் அழகாக தொகுத்து தந்திருக்கிறீங்க..

வாழ்த்துக்கள்

Yoga.S.FR said... Best Blogger Tips

வணக்கம் குட்டிப்பையா!அருமையான வரலாற்றுச் சிறப்புமிக்க குளத்தின் அத்தனை தகவல்களையும் அழகாக,படங்களுடன் தந்தமைக்கு நன்றி!பலருக்குப் புதிது!உலகெங்கும் சென்று சேரும்.

சுவடுகள் said... Best Blogger Tips

அந்தக்குளக்கரையில் படுத்து,அந்த குளத்தில் குளித்து... இன்னும் பல அனுபவங்களும் ஞாபகங்களும் இருக்குதப்பு.மறக்கமுடியுமா?
கொஞ்சம் தள்ளி,கனகாம்பிகைக்குளத்திலும்தான்.
இன்னுமொன்று-
சமாதான ஒப்பந்தத்திற்கு முந்தைய காலப்பகுதியில்(1999-2001 களில் ஏ9 வீதி பூட்டப்பட்டிருந்தபோது) வவுனியா செல்வோர் இந்த வழியாகதான் வந்து,பள்ளமடு போய்,வவுனியா போவார்கள்.குளக்கட்டில் ஏறும்போது சிலதடவைகளில் வாகனங்கள் கவிழ்ந்து,விபத்துக்கள் நேர்ந்த பயங்கரங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் குட்டிப்பையா!
சிறந்த பதிவொன்றை தந்திருக்கிறீங்க.. சிறுவயதில் பார்த்த குளம். நீண்ட நாட்களின் பின்னர் இப்போது உங்கள் புண்ணியத்தில் பார்க்கிறேன்..
நன்றி!!

KANA VARO said... Best Blogger Tips

இரணைமடுக்குளத்திற்கும், கனகாம்பிகை அம்மனுக்கும் நான் சென்றிருக்கின்றேன். தகவல் பகிர்வுக்கு நன்றி பையா!

ஹேமா said... Best Blogger Tips

எங்களூர் அழகு எங்கு வரும்.அருமையான படங்களோடு பதிவு.நன்றி குட்டிப்பையனுக்கு !

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said... Best Blogger Tips

உண்மையாகவே அருமையான பதிவு குட்டிப்பையா! ப்ஹோட்டோக்களும் அருமை! வோட்டர் மார்க் கொஞ்சம் உறுத்துது! நன்றீ பகிர்வுக்கு!

குட்டிப்பையன் said... Best Blogger Tips

அனைவருக்கும் நன்றி

அம்பலத்தார் said... Best Blogger Tips

அழகான படங்களுடன் நிறைவான பதிவு.

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!