Saturday, 24 March 2012

ஹல் ஹல்லோ! உல் உங்களுக்கு, சொல் சொல்ல தெல் தெரியுமோ?

புல் புதிதா சில் சில பல் பாசை நல் நாங்கள் பல் படிப்போம்! வல் வாருங்கள்!
இணையத்தினூடாக, ஈழவயலோடு இணைந்திருக்க ஓடி வரும் அத்தனை சொந்தங்களுக்கும் அன்பான இனிய தமிழ் வணக்கங்கள்;

ஒவ்வோர் இனத்தினதும் அடையாளமாக மொழி இருக்கின்றது என்பதை யாராலும் மறுத்துரைக்க முடியாது.இராணுவங்களும், போராட்ட அமைப்புக்களும் தமது இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக,சங்கேத பாசைகளை நடை முறையில் வைத்திருக்கிறார்கள். ஈழத்தில் பலருக்கும் அறிமுகமான ஓர் பாசையினை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் இணையில்லா மகிழ்ச்சியடைகின்றேன். 
நாங்கள் பள்ளிக் கூடத்தில் படித்த காலப் பகுதியில் ஒரு சிறு பிள்ளைத் தனமான விளையாட்டு விளையாடுவோம், எங்களது ’குறூப்பினுள் யாராவது ஒருத்தன் புதிதாக சேர்ந்திட்டான் என்றால், நாங்கள் பேசும் மொழி நடை அவனுக்குப் புரியாத மாதிரித் தான் திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்பது எங்களது பிரதான நோக்கமாக இருக்கும்.(ஏதோ பெரிய அரசியல், போராட்ட வீரர்கள் மாதிரி, இவங்கள் பெரிய ப்ளான் எல்லாம் பண்ணிருக்காங்க என்று மிரட்டுறீங்க.. வேணாம்... பாஸ்;-))) 

உதாரணத்திற்கு பள்ளிக் கூடம் முடிந்ததும் கள்ள மாங்காய் பிடுங்கப் போதல், கிணற்றில் நீந்தப் போதல், கிறிக்கற் அடிக்கப் போதல், இளநீர் பிடுங்கப் போதல் முதலிய பல விடயங்களை வகுப்பின் சக மாணவர்களுக்குத் தெரியாமல் செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் பிளானாக இருக்கும். இதற்கான பிரதான காரணம் புதிதாக நம்ம அணியில சேர்ந்தவன், சில வேளைகளில் நம்ம வீட்டில உள்ளவர்களிடம், ஆசிரியர்களிடம் நம்ம திட்டங்களைப் போட்டுக் கொடுத்து வம்பில மாட்டிடுவான் எனும் நோக்கத்தில தான் இப்படியான சங்கேத பாசைகளைப் பேச ஆரம்பிப்போம்.

நாங்கள் பேசும் மொழி, ஏதோ நாங்கள் கண்டு பிடித்த மொழி என்று நினைக்க வேண்டாம், இந்தச் சங்கேத பாசை காலாதி காலமாக எங்கள் ஊர்களில் இருந்து வருகிறது. (இதனைக் கண்டு பிடித்தவர், உருவாக்கியவர் யார் என்று ஆதார பூர்வமாகத் தெரிந்தால் யாராவது சொல்லுங்கோ) நாங்கள் பேசும் போது பேசும் ஒவ்வோர் சொல்லின் முதல் எழுத்துடன் ‘ல்’ சேர்த்து பேசுவோம். ஒவோர் வசனங்களைப் பேசும் போதும் முதல் எழுத்துடன் ‘ல்’ சேர்த்துப் பேசுவது தான் இந்தச் சங்கேத பாசையின் சிறப்பாகும். 

இந்தப் பாசையினை எப்படி நாங்கள் பேசுகிறோம் எனும் உத்தி(Technical)  தெரியாதவர்களுக்கு, இந்தப் பாசை புரியவே புரியாது. யாரைத் திட்ட வேண்டும் என்றாலும் சரி, அல்லது யாருடனாவது ஏதாவது ரகசியங்கள் பேச வேண்டும் என்றாலும் சரி, ஒரு கூட்டத்தின் மத்தியில் உங்கள் மனதிற்குப் பிடித்தவருடன் நீங்கள் உரையாட வேண்டும் என்றாலும் சரி இந்தப் பாசை உங்களுக்கும் நிச்சயமாய் கை கொடுக்கும். அது என்ன பாசை என்று ஒரு தடவை பேசித் தான் பார்ப்போமா?

எல் என்ரை பில் ப்ளாக்கை, பல் படிக்க வல் வந்திருக்கும், அல் அனைவருக்கும், நல் வணக்கம்!
"நில்நீங்க நல்நல்ல சுல்சுகம் எல்என்று அல்அறிகிறேன்.!"

அல் அழகு தல் தமிழ்நாட்டில கல்கலைஞர் கொல்கொள்ளை அல்அடிச்சு இல்இருக்கிறார் எல்என்னும் வில்விடயத்தை, நல்நாங்கள் அல்அறிவோம்.

கல் கலைஞர் ஞல் ஞானம் வல் வந்தவராய் கொல் கொலவெறியை எல் ஏற்படுத்தும் அல் அறிக்கை இல் இப்ப வில் விடுகிறார். உல் உந்த கில் கிழவருக்கு தெல் தெரியாதோ? கல் கண் கெல் கெட்ட பில் பின்னரோ சுல் சூரிய நல் நமஸ்காரம்? இல் இனி ஒல் ஒருத்தரும் உல் உந்த வல் வார்த்தைகளை நல் நம்பமாட்டீனம்!!

எல்லோரும் இந்தப் பாசையினைப் படித்து முடித்தாச்சா? அப்படீன்னா இந்தச் சங்கேத பாசையினுள் மறைந்திருக்கும் விடயங்களைக் கண்டறிய முடியுமா?

கல்கலைஞர், சொல்சோனியா, நல்நன்றாக கல்கபட நல் நாடகம் செல்சேர்ந்து நல்நடிக்கீனம்.

உல்உந்த, தில்திருவிளையாடல், இல்இனிமேல் எல் எங்களிட்டை, ஒல் ஒருபோதும் வல் வாய்க்காது,.

சல்சாகும் வல்வயசிலை, உல்உந்தக் கில்கிழவனுக்கு எல்ஏன் இல்இந்த பெல்பேராசை?

உல்உந்தக் கில்கிழவன், எல்எங்கள் இல்ஈழம் பல்பற்றி, இல் இனிமேலும் எல் ஏமாற்று வில் வித்தை கல் காட்ட குல் கூடாது.

நல்நாங்கள் எல்எல்லோரும், ஒல்ஒருநாள் அல்அடிச்சால், பல் பறக்கும் எல் என்பது, உல் உவர்க்குத் தெல் தெரியாதோ?

இந்த நினைவுகளை மீட்டிப் பார்க்கையில் என் பாடசாலைக் காலச் சிறு பராயம் மட்டும் நினைவில் வந்து போகிறது.

உல்உங்களுக்கு, இல்இப் பல்பதிவு, புல் புரிஞ்சுதா?
நல்நான் மெல் மெதுவாய் வில் வீட்டை பொல் போய், இல் இன்னோர் பல் பதிவோடு மில் மீண்டும் உல் உங்களைச் சந்திக்கிறேன்.

நன்றி,
வணக்கம்.
நேசமுடன்,
செ.நிரூபன்.

3 comments:

Anonymous said... Best Blogger Tips

எல்எனக்கு, இல்இப் பல்பதிவு ,சுல் சுப்பெர்ரா புல் புரிஞ்சிடுத்து ....

Anonymous said... Best Blogger Tips

நில்நீங்க நல்நல்ல சுல்சுகம் எல்என்று அல்அறிகிறேன்.!" ///////////////
நல்நான் சுல் சுப்பரா இல் இருக்கிறேன்.....

Anonymous said... Best Blogger Tips

கல் கலைஞர் ஞல் ஞானம் வல் வந்தவராய் கொல் கொலவெறியை எல் ஏற்படுத்தும் அல் அறிக்கை இல் இப்ப வில் விடுகிறார். உல் உந்த கில் கிழவருக்கு தெல் தெரியாதோ? கல் கண் கெல் கெட்ட பில் பின்னரோ சுல் சூரிய நல் நமஸ்காரம்?////////////////////////////////////

கல் கலைஞரரின் அல் அறிக்கை எல் எல்லாம் கல் கபட நல் நாடகம் தல் தான் எல் என மல் மக்கள் அல் அறிய மல் மாட்டாரோ ...

கல் கண்ணே இல் இல்லையாம் அல் அப்புறம் எல் எங்குட்டு சுல் சூரிய நல் நமஸ்காரம்

இங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்!

ஈழவயல்!